சாமுத்ரிகா லட்சணம்!

24 October 2019 ஜோதிடம்
hair2.jpg கழுத்து

நீண்ட சமமான கழுத்தையுடையவர்கள், கலைகளை அதிகம் மதிப்பர். உதவும் மனப்பான்மை அதிகம் காணப்படும். நீண்ட கழுத்துள்ளவர்கள் அடுத்தவரை மதிக்கமாட்டார்கள். சிறிய கழுத்துடையவர்கள் ஏமாற்றுப் பேர்வளிகளாக இருப்பர். நடுத்தர நீளமுடைய கழுத்துள்ளவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பர். கழுத்து பருமனாக இருந்தால் அதிர்ஷ்டம் அதிகம் இருக்கும்.


கை

கை நீளமாக இருந்தால், திறமைசாலியாக இருப்பர். உடல்நலக் கோளாறு அடிக்கடி ஏற்படும். கை குட்டையாக இருந்தால், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வர். கை சரிசமமாக இருந்தால், பேசியேக் காரியம் சாதித்துவிடுவர்.


மார்பு

பரந்த மார்புடையவர்கள், தைரியத்துடனும், வேலையில் கவனமாகவும் இருப்பர். சொந்தக்காலில் நிற்கும் பாக்கியம் பெற்றவர். சிறிய மார்புடையவர்களின் பின்பகுதி வாழ்க்கை யோகமுடையதாக அமையும். அதிக சதைப்பற்றுடன் மார்பிருந்தால், முன்கோபம் அதிகம் காணப்படும். மார்பு சதைப்பற்றின்றி எலும்பாக இருந்தால், மற்றவர்களின் வளரச்சிக்கு உதவியாக இருப்பர்.


இடுப்பு

மெலிந்த இடுப்பை உடைய பெண்களையே, அதிகமான ஆண்கள் விரும்புகின்றனர். பெறிய இடுப்பை உடையவர்கள், சோம்பலுடன் காணப்படுவர். சிறிய இடுப்பை உடையவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பர்.


வயிறு

வயிறு பெரியதாக இருந்தால், மூர்க்கத்தனமாக நடந்து கொள்வர். சமமான வயிறுடையவர், எதிர்பாலினத்தை அதிகம் ஈர்க்கும் தன்மைப் பெற்றவர். இவர்களுக்கு மந்திர தந்திரத்தில் அதிக ஆர்வம் இருக்கும். சிறியதாக வயிறு இருந்தால், அதிகம் பேசமாட்டார்கள். கவனமாகவும் திறமையாகவும் செயல்படுவர்.


முதுகு

முதுகு சமமாக இருந்தால், நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று தெய்வ அருளுடனும், செல்வ வளத்துடனும் வாழ்வர். சமமின்றி கரடுமுரடாக முதுகு இருந்தால், மிகவும் கோபக்காரர்களாக இருப்பர். முதுகு மிருதுவாக இருந்தால், அன்புடனும், பண்புடனும் வாழ்வர். கூன் விழுந்தது போன்ற முதுகையுடையவர்கள், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுப் பொருள் சேர்ப்பர்.


தொடை

தொடைப் பெரியதாக இருந்தால், இனிமையான குணம் இயற்கையாகவே இருக்கும். மெலிந்த தொடையை உடையவர்கள், கடின உழைப்பாளிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பர்.