சாமுத்ரிகா லட்சணம்!

24 October 2019 ஜோதிடம்
hair2.jpg மூக்கு

மூக்கைக் கோபத்தைக் குறிக்கப் பயன்படுத்துவர். நீண்ட மூக்கையுடையவர்கள், தைரியசாலியாகவும், முன்கோபம் உள்ளவர்களாக இருப்பினும், தூய்மையான உள்ளம் உள்ளவர்கள். தடித்த மூக்கையுடைவர்கள், காரியக்காரர்களாக இருப்பர். இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்றுப் பேசத் தெரியாதவர்கள். நீண்ட மூக்குடன் தடித்த நுனியை உள்ளவர்கள், நிதானமாக யோசித்துக் காலத்தைப் பொறுத்து முடிவு எடுப்பர்.


சிறிய மூக்கு உள்ளவர்கள், குறுகிய மனப்பான்மையுடன் இருப்பர். தனிமையையும், அமைதியையும் அதிகம் நேசிக்கும் தன்மையுடையவர். மூக்கு கிளிப் போன்று இருந்தால், கர்வத்துடனும், மன அமைதியின்றியும் இருப்பர். குறைந்தப் புகழ் இருந்தாலும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தத்தில் இருப்பர்.


உதடு

உதடு சிவப்பாக இருந்தால், நல்ல அறிவுடனும் செல்வ செழிப்புடனும் வாழ்வர். உயர் பதவியில் இருப்பர். புகழ் கூடிக் கொண்டே, இருக்கும். கருப்பான உதடு இருந்தால், உடல்நலக் குறைவு அடிக்கடி ஏற்படும். மேலும், மனஅமைதியின்றி வாழ்வர். மேல்உதடு, சிறியதாகவும் கீழ் உதடு பெரியதாகவும் இருந்தால், சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பர். பட்டும் படாமல், அனைவருடனும் பழகுவர்.


உதடு தடிப்புடன் இருந்தால், அறிவாளியாகவும், தைரியத்துடனும் சுதந்திரமாக வாழ்க்கையை வாழ விரும்புவர். உதடு தடிப்பாக தொங்குவது போல இருந்தால், அவர்கள் நல்ல நிலையில் இருந்தாலும், ஒரு விதமானக் குழப்பத்துடனேயே இருப்பர். இவர்கள் கடுமையாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்.


காது

காது பெரிதாக இருப்பவர்கள், பலசாளிகளாகவும், அன்புள்ளவர்களாகவும் இருப்பர். அறிவும், ஞாபக சக்தியும் அதிகம் இருக்கும். சிறிய காதுள்ளவர்கள், சுயநலவாதியாகளாக இருப்பர். மேலும், இவர்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவர். சுரசுரப்பான காதையுடையவர்கள், பிறருக்காக வாழ்பவர்கள்.


காதில் முடி அதிகம் இருந்தால், முன் வாழ்க்கையை விட பின் வாழ்க்கை மிக அற்புதமாக இருக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக வாய்ப்பளிக்கும். மென்மையான காதுடையவர்கள், திட்டமிட்டு செயல்படும் தன்மையுடையவர்கள். மேலும், இவர்கள் எறும்பைப் போன்று மிக சுறுசுறுப்பானவர்கள்.


கன்னம்

கன்னம் பருமனாக இருப்பவர்கள், அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். ஆனால், இவரை எளிதில் ஏமாற்றிவிடலாம். நன்குப் பேசத் தெரிந்தவர்கள். எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பர். கன்னம் பருமனாக தொங்கிக் கொண்டிருந்தால், நல்ல மனம் இயற்கையாகவே இருக்கும்.


பல்

பற்கள் வரிசையாக இருந்தால், கலகலப்பான குணமும், தாராள உள்ளமும் உடையவர்கள். பற்கள் சிறியதாக இருந்தால் நிலமைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டு தங்கள் வெற்றியை நோக்கிச் செல்வர். பற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தால், புத்திசாலியாக இருப்பர். பெரிய நெருக்கமானப் பற்களை உடையவர்களிடம், திமிரு சற்று அதிகம் காணப்படும்.


நடுவிலுள்ளப் பற்கள் நீளமாகவும், இருபுறமும் கூர்மையானப் பற்கள் உடையவர்கள், புகழுடனும் ஞானிக்குறியத் தன்மையுடனும் இருப்பர். இவர்களிடம், தெய்வீக சிந்தனை அதிகம் இருக்கும். பற்கள் கோணலாக இருந்தால், எவரையும் பொருட்படுத்தாமல் நினைத்தைச் சொல்வர், நினைத்ததையேச் செய்வர்.


தாடை

சிறியத் தாடையுள்ளவர்கள், முன்னெச்சரிக்கையாக எதையும் யோசித்துச் செய்யும் திறனுடையவர்கள். காலத்திற்கேற்ப, தம்மை மாற்றிக் கொள்வர். பேசுவதைக் காட்டிலும், செயலை மட்டுமே அதிகம் நம்புபவர். பெரிய தாடை இருப்பவர்கள், சற்றுக் குழப்பத்துடனேயே காணப்படுவர். இவர்களுக்கு வெளியுலக மதிப்பும், மரியாதையும் அதிகமாகவே கிடைக்கும்.


நடுவில் வெட்டியதைப் போன்ற தாடையுள்ளவர்கள், பெயருடனும், புகழுடனும் வாழ்வர். இவர்களுக்கு ஏமாறுவது பிடிக்காது. தாடை அதிக சதைப்பற்றுடன் இருப்பவர்களின், வாழ்வு சந்தோஷமாக இருக்கும். பெரிய தாடையுடன் மேடுபள்ளம் கலந்திருந்தால், புத்திசாலியாக இருப்பர். இவர்களிடம் சுயநலம் அதிகம் காணப்படும்.


நாக்கு

நீண்ட நாக்குடையவர்கள், பேச்சில் வல்லவர்கள். இவர்களை பேசி வெல்வது அரிது. மேலும், இவர்கள் தன் எதிரியைக் கூட பேசிய கவிழ்த்துவிடுவர். சிறிய நாக்குள்ளவர்கள், கடினமாகப் பேசும் தன்மை உள்ளவர்கள். ஒரு சொல் என்றாலும், அது மிகக் கடுமையானதாக இருக்கும்.