பெண்களுக்கான மச்சப் பலன்கள்

24 October 2019 ஜோதிடம்
breastmole.jpg

தாடை


வலதுபுறம்-உடல் பலவீனமாகக் காணப்படும். அடுத்தவர்கள் தலையிடமாட்டார்கள். சீரானப் பொருளாதார நிலைக் காணப்படும்.இடதுபுறம்-நேர்மறை எண்ணங்களைக் கொண்டவர். எதிரிகள் இல்லாமல் வாழ்பவர்.திறமை மிகுந்து காணப்படுவர்.

நாக்கு


நாக்கில் மச்சம் உள்ளவர்கள் கூறும் விஷயங்கள் பழிக்கும். நல்லச் சொற்களைக் கூறுவதன் மூலம், நல்ல வாழ்க்கையை அடையலாம்.

கழுத்து


வலதுபுறம்-தேவையற்றப் பேச்சால் வம்பை வளர்ப்பவர்கள். இடதுபுறம்-பணவசதி அதிகம் இருக்கும். வெற்றிப் பெறும் வரை முயற்சிப்பர்.

மார்பு


வலதுபுறம்-உடல்நிலை சீரின்றி இருக்கும். இடதுபுறம்-விடாமுயற்சியால் வெற்றிப் பெறுபவர்.தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள்.

இடுப்பு


வலதுபுறம்-சிறிய செயல்களையும் போராடியே முடிப்பர். இடதுபுறம்-என் வழி தனி வழி என வாழ்பவர். பணம் சம்பாதிக்கத் தெரிந்த திறமைசாலி.

வயிறு


வலதுபுறம்-வசதியான வாழ்வு இருந்தும் திருப்தியின்றி இருப்பர். இலகிய மனம் உடையவர். இடதுபுறம்-வெற்றிக்காகவே வாழ்பவர். புத்திசாலித்தனம் இவருடன் பிறந்தது.

தொப்புள்


தொப்புளில் மச்சம் உள்ளவர்கள், நல்ல அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். செய்யும் செயல்களில் வெற்றித் தேடி வரும்.

முதுகு


வலதுபுறம்-உடலில் எதாவது பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இடதுபுறம்-வாக்குவாதமின்றி அன்புடன் வாழ்வர். தனிமையை விரும்பும் சுபாவம் உடையவர். இலகியமனமுடையவர்.

கை


வலதுபுறம்-பயம் அதிகம் உள்ளவர்களாக இருப்பர். இடதுபுறம்-அனைத்துச் செயல்களையும் சிறப்பாகச் செய்வர்.