பெண்களுக்கான மச்சப் பலன்கள்

24 October 2019 ஜோதிடம்
breastmole.jpg

பொதுவாகப் பெண்களுக்கு உடலின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அது நல்ல வாழ்க்கையைக் குறிக்கக் கூடியது.


நெற்றி

வலதுபுறம்-பொறுமை மிகக் குறைவாக இருக்கும். திடீர் பணவரவுக்குப் பஞ்சம் இருக்காது.


இடதுபுறம்-பதவி,புகழ் மற்றும் கௌரவம் தேடி வரும். குடும்பத்திற்காக வாழ்வர். நெற்றியின் நடுவில் இருந்தால் திருமணத்திற்குப் பின் யோகமான வாழ்க்கை அமையும். அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமையும்.


இரப்பை

வலதுபுறம்-திறமைசாலிகளாக இருப்பர். ஆபரணச் சேர்க்கையில் அதிக ஈடுபாடு இருக்கும்.


இடதுபுறம்-அனுசரித்துச் செல்லும் பழக்கம் இருக்கும். சொத்துச் சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பர்.


மூக்கு

வலதுபுறம்-பிரச்சனைகள் தானாகத் தேடி வரும். பொருள் தாராளமான பொருள் சேர்க்கை இருக்கும்.


இடதுபுறம்-எதிரிகளின்றி மகிழ்ச்சியுடன் வாழ்வர், சிக்கனமானவர்கள். மூக்கின் நடுவில் மச்சம் இருந்தால் கோபக்க்காரர்களாகவும், அதே சமயம் அதிக ஆர்வம் உடையவர்களாகவும், இருப்பர். இவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.


மேல் உதடு

வலதுபுறம்-வீண்விரயம் ஏற்படும்.


இடதுபுறம்-பொறுமை மற்றும் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். மேல்உதட்டின் நடுவில் மச்சம் இருந்தால், அது நல்ல மனதைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லி, விளங்க வைப்பதில் வல்லவர்கள்.


கீழ் உதடு

வலதுபுறம்-சகல ஐஸ்வர்யத்தையும் பெற்று நலமுடன் வாழ்வர். புத்திசாலியாகவும், சாதுர்யமாகவும் இருப்பர்.


இடதுபுறம்-பெண்களுக்குப் பெரும்பாலும் கீழ் உதட்டின் இடதுபுறத்தில் மச்சம் இருப்பதில்லை. இவர்கள் அரிதான மற்றும் இறை அருள் நிறைந்தவர்கள்.


காது

வலதுபுறம்-அரசாங்கப் பிரச்சனைகள் ஏற்படும். மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.


இடதுபுறம்-அழகாகவும், அன்பாகவும் இருப்பர். அனைத்து யோகங்களையும் அனுபவிப்பர்.


கன்னம்

வலதுபுறம்-மனஅமைதி குறைந்து இருப்பர்.மனதில் பட்டதைச் செய்வர்.


இடதுபுறம்-எளிதில் பழகும் தன்மையுடையவர். நடுவயதில் செல்வசெழிப்புடன் வாழ்வர். குடும்பத்திற்காக வாழும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்.