தோஷங்களும்! பரிகாரங்களும்

24 October 2019 ஜோதிடம்
செவ்வாய் தோஷம்
sevai_thosam.jpg

செவ்வாய் பகவான் 1,4,7,8 மற்றும் 12 ஆகிய இடங்களில் வாசம் செய்யும் பொழுது, இந்த தோஷம் ஏற்படுகிறது. பெரும்பாலான தோஷங்கள் செவ்வாயின் இடத்தாலேயே ஏற்படுகின்றது. பொதுவாக செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணத்திற்குப் பின் தம்பதிகளில் ஒருவர் இறந்து விடுவர், என நம்பப்படுகிறது. உண்மையில் அதற்கு நிகரான இழப்பு மட்டுமே ஏற்படும். தவிர, ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தே துர்சம்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம், எந்த ஒரு நல்ல நேரத்திலும் கெட்ட சம்பங்கள் நிகழும். அதே சமயம், எந்த ஒரு கெட்ட நேரத்திலும் சில வாழ்க்கையை மாற்றும் நல்ல சம்பவங்களும் நிகழும்.


இந்த தோஷம் உடையவர்களுக்கும், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குப் பின் இது நல்லதைச் செய்யும். துர்சம்பவங்களைத் தவிர்க்க செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மற்றொரு செவ்வாய் தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்வதன் மூலம் பாதிப்பிலிருந்து தப்பிக்க இயலும்.


பரிகாரம்-புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியில் சக்தி வழிபாடும் காளி தேவியின் வழிபாடும், செவ்வாய் தோஷத்தின் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும். கார்த்திகை மாதம் முருகப்பெருமானின் வழிபாடு கஷ்டத்தை நீக்கி, கெட்ட நேரம் முடிந்த பின்னர் செவ்வாய் தோஷத்தை யோகமாக மாற்றும்.


களத்திர தோஷம்
kalathra_dhosam.jpg

ஜாதகத்தில் திருமணப்பந்தத்தைக் குறிக்கின்ற 7-ம் வீட்டில் எந்தக் கிரகங்களும் இல்லாமல் இருப்பது மட்டுமே சிறந்தது. இல்லையென்றால், ஆப்புதான். அதிலும், சனி அல்லது ராகு, கேது கிரகங்கள் இருந்தால் மிகவும் சிரமத்தை அளிக்கும். லக்கனத்தில் ராகு அல்லது கேது இருந்தால் கண்டிப்பாக 7-ம் வீட்டில் மற்றொன்று இருக்கும். அதாவது. லக்கனத்தில் ராகு இருந்தால் 7-ம் வீட்டில் கேது இருக்கும். லக்கனத்தில் கேது இருந்தால் 7-ம் வீட்டில் ராகு இருக்கும். இது களத்திர தோஷத்தை உண்டாக்கும். அதே போல் ஜாதகத்தில் 2,7 மற்றும் 11 கட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளாலும் உருவாகின்றன.


இந்த தோஷத்தால் மிகவும் தாமதமாகத் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு. இந்த தோஷத்தால் திருமணத்தில் தடை, அல்லது தாமதமான திருமணம் ஏற்படலாம். சில சமயம் திருமணம் கடைசி வரை நடைபெறாமல் கூட இருக்க வாய்ப்புண்டு. அப்படியே நடந்தாலும், திருமண உறவில் விரிசல், தம்பதிகளுக்கிடையேக் கருத்து வேறுபாடு, சொந்த பந்தக்களுக்கிடையே பிரச்சனைகள் என திருமணம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் ஏறப்படுகின்றன.


இந்த தோஷம் உள்ளவர்கள் வாழ்வின் முன் பகுதியில் கஷ்டப்பட்டாலும் வாழ்வின் பின் பகுதியில் வெற்றி வாகை சூடுவர். இந்தத் தோஷம் உள்ளவர்களின் முகம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இவர்களின் கண்கள் எதிரிகளைக் கூட ஈர்க்கும் சக்தியுடன் இருக்கும்.


பரிகாரம்-திருமணமாகாதப் பெண்களுக்கு திருமணத்திற்காக தாலி, அல்லது தங்கத்தைத் தானம் செய்வது, கோவில்களுக்கு தானம் வழக்குவது போன்று செய்தல் தோஷத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். காளஹஸ்தி சென்று சரியான பூஜை செய்தால், பிரச்சனைகளின் வீரியத்தைக் குறைக்கலாம். தோஷம் உள்ள ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.


கால சர்ப்ப தோஷம்
kala_sharba_dhosam.jpg

இது ராகு மற்றும் கேது கிரகங்கள் மாறுபட்ட இடங்களில் வாசம் செய்வதால் ஏற்படுகிறது. நம்முடைய சூப்பர் ஸ்டாருக்குக் கூட இந்த தோஷம் உண்டு. இதனை 12 வகைகளாகப் பிரக்கலாம். இது பாம்பின் மூலமாக ஏற்படுகிறது. குறித்தக் காலத்தில் திருமணம் நடப்பதில் தடை, அல்லது தாமதமான திருமணம் போன்றப் பிரச்சனைகள் இந்த தோஷத்தால் ஏற்படுகிறது. இது நம்முடையப் பெற்றோர் அல்லது மூதாதையர் அல்லது நம்முடைய இந்த அல்லது முன் ஜென்மத்தில் பாம்பிற்குத் தீங்கு செய்திருந்தால் அல்லது கொன்றிருந்தாலோ இந்த தோஷம் ஏற்படும். இது தொழிலில் ஏற்படும் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடும். வாழ்வின் முன்பகுதியில் இந்த தோஷத்தால் வறுமையையும், பின்பகுதியில் செல்வ செழிப்பையும் பெறுவர்.


இந்தத் தோஷம் உள்ளவர்கள் மிகவும் அமைதியாகவும் பண்பானவர்களாகவும் இருப்பர்.


பரிகாரம்-அதே சமயம் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் தந்து உதவி செய்வது மற்றும் நாக தேவதைகளைப் பூஜிப்பதன் மூலம் யோகம் பெற்று வாழலாம். ஆனால், தோஷத்தின் நேரம் முடியும் வரை, பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் அம்பாள் வழிபாடும், சிவனின் அருளும் கண்டிப்பாகக் காத்து நிற்கும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் இந்த தோஷம் யோகமாக மாறி நல்ல நிலையை அடைய சிவபெருமானைப் பூஜை செய்தல் அவசியம்.


நாடி தோஷம்
naadi_dhosam.jpg

இது ஒரே நாடியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதால், இந்தத் தோஷம் ஏற்படுகிறது. இது பிறக்கும் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும்.


நாம் எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும், எந்தவொரு தோஷத்தையும் போக்க முடியாது. ஆனால், ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தி அல்லது கெட்ட நேரம் முடியும் வரை நாம் அமைதி காக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக தோஷத்தின் வீரியம் குறையும் காலத்தின் பொழுது, வாழ்க்கையில் நாம் எதிர்ப்பார்க்காத அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.


பரிகாரம்-பொதுவாக தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்தால், அவர்களுடைய தாரம் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, முதலில் நல்ல நேரம் எப்பொழுது உங்கள் ஜாதகத்தில் உள்ளது என்பதை அறிந்து, அந்த நேரத்தில் வாழை மரத்திற்கு தாலியைக் கட்டி பின் அந்த வாழை மரத்தை வெட்டிவிட்டால் தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் கிட்டத்தட்ட நீங்கி சுப வாழ்வைப் பெறலாம்.