தோஷங்களும்! பரிகாரங்களும்

24 October 2019 ஜோதிடம்
சுக்கிர தோஷம்!
shukira_dhosam.jpg

இந்தத் தோஷத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது. அசுரர்களுக்கு கடவுள் போல் திகழும் சுக்கிரனால், ஏற்படும் தோஷம் சுக்கிர தோஷம் ஆகும். இந்தத் தோஷமும் திருமணத் தடை மற்றும் காலம் கடந்த திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. இந்தத் தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தில் சுக்கிர பகவான் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கிரகத்துடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக் காரணமாக அமைகிறது.


சரியான தசா புத்தி வரும் வரைக் காத்திருத்தலே நல்ல பரிகாரம் ஆகும். இல்லையென்றால் தேவையற்றப் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். ஒருவரின் ஜாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ, கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ, 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.


சுக்கிர தோஷம் மற்றத் தோஷங்களைப் போன்று கெடுதல் பலன்களை அதிகமாக அளிப்பதில்லை. எனினும், திருமண உறவில் விரிசல் அல்லது பிரிவுக்கு சில சமயங்களில் காரணமாக அமைகிறது.


பரிகாரம்-தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.


மாங்கல்ய தோஷம்!
mangalya_thosam.jpg

ஒருவரின் ஜாதகத்தில் லக்கனத்திலிருந்து, மாங்கல்யத்தைக் குறிக்கும் 8-ம் வீட்டில் கெடுதல்களை விளைக்கும் கிரகங்களின் கூட்டணி இருந்தால், அவை இந்த தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தோஷத்தால் கணவன்-மனைவி, தொழிலுக்காகவோ அல்லது சண்டையின் மூலமோ பிரிந்து இருக்க வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மிகக் குறைவாக இருக்கும்.


சில சமயங்களில் கிரகங்களின் அரசரான சூரிய பகவான், லக்கனத்திலிருந்து 8-ம் வீட்டில் அமர்வதால் இந்த தோஷம் ஏற்படும். இதனால், தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு மற்றும் எரிச்சலூட்டக்கூடிய சம்பங்கள், இருவரிடையே நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த தோஷம் அதிகமாக இல்லவிடினும் இருபதில் ஒருவருக்கு இருக்க வாய்ப்புண்டு.


பரிகாரம்-நட்சத்திர வழிபாடு, ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வத்திற்கான வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு மட்டுமே இதற்கான பரிகாரம் ஆகும்.


புத்திர தோஷம்!
sevai_thosam.jpg

தம்பதிகளுக்கிடையே எந்தக் குறையுமின்றி மிகவும் puthira_dhosam இருந்தாலும், குழந்தைப் பாக்கியமில்லாமல் மிக வேதனையுடன் இருப்பர். இதற்கு முக்கியக் காரணம், இந்தப் புத்திர தோஷமே ஆகும். இந்த தோஷம் உள்ளவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் உருவாவதில் தாமதம், கருவிலேயே அழிதல், பிறந்த குழந்தையும் பிரச்சனையோடு இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.


இதற்குக் காரணம், லக்கனத்திலிருந்து 5-ம் வீட்டில் சர்ப கோள்களான ராகு அல்லது கேது வாசம் செய்தலே ஆகும். அது போல, 5-ம் வீட்டில் சனி பகவான் வாசம் செய்தாலும் இந்தத் தோஷம் ஏற்படும். எனினும், இவை அதிகம் பேரைப் பாதிப்பதில்லை. ஆனால், சர்ப கிரகங்களுடன் 5-ம் வீட்டில் சனி மற்றம் செவ்வாய் இணைந்திருந்தால், அது மிக்க கெடுதலை விளைவிக்கும். குறிப்பாக தம்பதிகள் இருவரின் ஜாதகத்திலும், இந்த அமைப்பு இருந்தால் மட்டுமே இந்த தோஷம் வேலை செய்யும். இல்லையென்றால், இதனால் பெரிய பாதிப்பு இருக்காது.


பரிகாரம்-அம்மனை வேண்டி விரதம் இருத்தல், ஐயப்பனை வழிபடுதல் இந்த தோஷத்திலிருந்து நம்மைக் காக்கும். குல தெய்வ வழிபாடு இல்லாமல் இந்தப் பரிகாரங்களைச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.


சந்திர தோஷம்!
chandra_dhosam.jpg

ஒருவரின் ஜாதகத்தில் சர்ப கிரகங்களுடன் சந்திரன் இணைந்து இருந்தால், அது சந்திர தோஷம் ஆகும். இது மனநிம்மதியைக் கெடுக்கக்கூடியது. முடிவு எடுப்பதில் தடுமாற்றம் மற்றும் தாய்வழி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.


பரிகாரம்-தொடர்ந்து 21 திங்கட்கிழமை சிவனுக்கு வில்வ இலை சாற்றுவதன் மூலம் இதன் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடலாம். குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும்


அனைத்துத் தோஷங்களுக்கும் ஏற்றப் பொதுவானப் பரிகாரம் என்றால், அது சிவ வழிபாடு மட்டுமே. நம்பியவரை கைவிடாமல் அவருக்காக இறங்கி வருவதில் சிவனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. அது மட்டுமின்றி, குல தெய்வத்தை சரியாக பூஜை செய்து வந்தால், எந்த தோஷத்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.