சுக்கிர பகவான் இவர்களின் இராசி அதிபதியாவார். நீண்ட ஆயுள் உண்டு. செல்வத்திற்கும், புகழுக்கும் குறைவிருக்காது. சந்தோஷமான மனநிலையை உடையவர். உண்மையையும், நேர்மையையும் விரும்புபவர். வரவுக்கு மிஞ்சி செலவு செய்பவர்கள் என்பதால் சேமிப்பது மிகக் கடினமான விஷயமாகும். திருமணத்திற்குப் பின்னரே வளமான வாழ்க்கை அமையும். இவர்கள் விரும்பிய அல்லது எதிர்பார்த்த வாழ்க்கைத் துணையே இவர்களுக்கு அமையும். குடும்பத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். மேலும் நடுத்தர வயதை அடைந்த பின்னரே நிம்மதியையும், நிலையான செல்வத்தையும் பெற்று புகழுடன் வாழ இயலும்.
மங்களத்தை அருளும் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார்கள். பேச்சில் வாள் வீசும் திறன் உடையவர்கள். கம்பீரமாகவும், நேர்மையாகவும் வாழ நினைப்பவர்கள். எனினும், இவர்களுடைய பிடிவாதக் குணத்தால் வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். வெளிநாடுகள் செல்லும் வாய்ப்புகள் மிகக் குறைவு. வரவுக்கேற்ற செலவு செய்து வாழ்வர். பிள்ளைகள் மூலம் நல்லப் பெயரைப் பெறுவர்.
வாழ்வை மாற்றி அமைக்கும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், நல்ல உயரமும், நடுத்தர அழகுடனும் இருப்பர். இவர்கள் நீண்ட ஆயுளுக்குச் சொந்தக்காரர்கள். நடக்கவிருப்பதை முன்னரே அறியும் தீர்க்கத்தரிசியாக இருப்பர். யாருக்கும் கீழ்படிய மாட்டார்கள். இவர்களுக்கு தாமதமாகவே திருமணம் நடைபெறும். சிறுவயது முதலே பணத்திற்கும், சந்தோஷத்திற்கும் குறைவின்றி வாழ்வர்.
சனீஸ்வரரின் அருள் பெற்ற மகரராசியினர் நடுத்தர உயரம் உடையவர்கள். தெளிவாகப் பேசும் இவர்கள் எப்பொழுதும் மனக் குழப்பத்துடனேயே இருப்பர். நம்பியோரைக் கைவிடாமல் நேர்மையாகவும், தருமவானாகவும் வாழ்வர். பெரும்பாலும் மகர இராசிக்காரர்கள் காதல் திருமணத்தையே இறைவனின் பரிசாகப் பெறுவர். சிறப்பான குடும்பம் அமைந்து நல்வாழ்க்கை வாழ்வர்.
இவர்களின் இராசி அதிபதி சனீஸ்வரன் ஆவார்.இவர்கள் மற்றவர்களை விட சற்று வினோதமானவர்கள். அமைதியான குணமும், பிடிவாதத்தையும் உடைய இவர்கள் மற்றவர்களை விட சற்று வித்தியாசமாகவே எதையும் பார்ப்பர். திடமான மனதை உடைய இவர்களுக்கு, மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். தன வரவுக்கு ஏற்ற ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். இறை அருள் இருந்தால் இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். அதிலும் பெண் பிள்ளைகளையே அதிகம் பெற்றெடுப்பர்.
குரு பகவானின் அருள் பெற்ற இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவர். அதிர்ஷ்டம் இவர்களுடன் பிறந்தது எனக் கூறலாம். இவர்களுக்கு எந்தக் கிரகத்தின் பாதிப்பும் இருக்காது. குட்டையான உருவத்துடனும், கம்பீரமான தோற்றத்தைப் பெற்றிருப்பர். இவர்கள் எப்பொழுதும் கற்பனை உலகத்திலேயே இருப்பர். இவர்களிடம் இரகசியத்தைக் கூறினால் அது ஆபத்திலேயே முடியும். பயந்த சுபாவம் உள்ளவர்கள். அதே சமயம் தீமை செய்யும் பண்புள்ளவர்கள். அனைத்து வழிகளிலும் பணம் சம்பாதிக்க முயல்வர். தாமதமாகவே திருமணம் நடைபெறும்.