12 இராசிகளுக்குரிய பொதுவான குணநலன்கள்!

24 October 2019 ஜோதிடம்

உலகம் முழுக்க பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், மொழிகள் மற்றும் சாஸ்திரங்கள் இருந்தாலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது 12 இராசிகளே. இந்த 12 இராசிகளில் உலகில் உள்ள அனைவரையும் பிரித்துவிடாலம். இந்த 12 இராசிகளுக்கான பொதுவான குணநலன்களைப் பற்றிப் பார்ப்போம்.


மேஷம்


mesham.jpg
நட்சத்திரம்-பரணி, அசுவினி, கிருத்திகை.

இதுவே இந்திய முறைப்படி முதல் இராசியாகும். இந்த இராசிக்காரர்கள் நடுத்தர உயரமும், நிமிர்ந்த நடையும் கொண்டவர்கள். நல்ல ஆயுளும், இறைபக்தியும் இவர்களுக்கு உண்டு. பேசுவதிலும், காரியம் சாதிப்பதிலும் வல்லவர்கள். நல்ல திறமையும் அறிவும் உள்ளவர்கள் என்பதால் நிர்வாகப் பொறுப்புகளில் புகழ்பெற்று விளங்குவர். குடும்பச்சிக்கல் இவர்களுடன் பிறந்த ஒன்று. தன்னுடைய குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். இவர்கள் மிகவும் வெகுளியானவர்கள் என்பதால் இவர்களை சுலபமாக ஏமாற்றி விடலாம்.


ரிஷபம்


rishabam.jpg
நட்சத்திரம்-கிருத்திகை, ரோகினி, மிருகசீரிஷம்.

சுக்கிரன் இவர்களின் அதிபதியாக உள்ளதால் ஆடம்பர வாழ்க்கைக்கும், சிற்றின்பத்திற்கும் பஞ்சம் இருக்காது. இவர்கள் சுமாரான உயரமும், அழகிய உடல் அமைப்புடன் காணப்படுவர். தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடையவர்கள். ரிஷப இராசியைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வெண்மை நிறத்தையே விரும்புவர். இந்த இராசிக்கார்களுக்குத் தாமதமாகவேத் திருமணம் நடைபெறும். இந்த இராசியைச் சேர்ந்த ஆண்களுக்குப் பெண்கள் பழக்கம் அதிகம் இருக்கும். தன்னுடைய சொந்த முயற்சியால் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவர்.


மிதுனம்


mithunam.jpg
நட்சத்திரம்-மிருகசீரிஷம், திருவாதிரை, புணர்பூசம்

இந்த இராசிக்கார்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பெரும்பாலும், சிவப்பாகவும், அழகான உடல் அமைப்புடனும் இருப்பர். நல்ல உயரமாகவும், ஒல்லியான தேகத்துடனும் இருப்பர். ஜாதகத்தில் நட்சத்திரம் வலுவான நிலையில் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பர். யோசித்துச் செயலாற்றும் தன்மையுடைய இவர்கள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ்வர். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள். திருமண வாழ்க்கையில் இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களுக்கு அமையும் துணை, இவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு நடப்பர். சந்தோஷத்தில் மட்டுமே மனம் லயித்திருக்கும். பிள்ளைகளால் பிரச்சனைகள் எழலாம்.


கடகம்


kadagam.jpg
நட்சத்திரம்-புணர்பூசம், பூசம், ஆயில்யம்

சந்திரனின் ஆசியில் பிறந்த இவர்கள் அழகான முகத்துடன் இருப்பர். கடகம் ஒரு பெண் இராசி ஆகும். நல்ல அறிவாற்றலும், கூர்மையான ஞாபக சக்தியும் இவர்களிடம் பிரகாசிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நினைத்தக் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பர். இவர்கள் அனைவரிடமும் எளிதில் பழகிவிடுவர். முன் யோசனையால் இவர்கள் பலப் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடுவர். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையானவர் எதற்கும் சளைக்காமல் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பார். சுகமாக வாழ்வதற்காக இவர்கள் எதையும் செய்வர். திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.


சிம்மம்


simmam.jpg
நட்சத்திரம்-மகம், பூரம், உத்திரம்

சூரியன் இவர்களின் அதிபதியாவார். நடுத்தர உயரம், உருண்டையான முகம் உடையவர்கள். தைரியத்திற்குப் புகழ் பெற்ற இவர்களை எதிர்த்தால் தோல்வி மட்டுமே மிஞ்சும். கள்ளம் இல்லாத உள்ளத்தையும், சூதுவாது இல்லாத அறிவையும் உடையவர்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள்.எனவே, இதைப் பயன்படுத்தி பலர் இவர்களைப் பயன்படுத்திக் காரியம் சாதிப்பர். தவறை ஒப்புக்கொள்ளும் பக்குவத்தை உடையவர்கள். அதே, சமயம் வெற்றிப் பெரும்வரைப் போராடுபவர். அந்நியத்தில் திருமணம் நடக்கும். தனிக் குடித்தனத்தையே அதிகம் விரும்புவர். தரமானவற்றையே வாங்கவும், பயன்படுத்தவும் விரும்புவர். அதிக ஆண் பிள்ளைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ்வர்.


கன்னி


kanni.jpg
நட்சத்திரம்-உத்திரம், அஸ்தம், சித்திரை

புதன் பகவான் இவர்களின் அதிபதியாவார். என்றும் பதினாறு போல் எப்பொழுதும் இளமையாகவே இருப்பர். இவர்களின் வயதைக் கணிப்பது மிகவும் கடினமான செயலாகும். இது ஒரு பெண் இராசி மட்டுமின்றி இவர்களுக்கு பெண்களுக்குரிய கூச்சமும், அச்சமும் இயற்கையாகவேக் காணப்படும். நடுத்தர உயரமும், அழகிய உடல் அமைப்பும் உடையவர்கள். கன்னி இராசிக்காரர்களுக்கு கோபம் வருவது மிக அறிதான ஒன்றாகும். குடும்பத்தை அதிகமாக விரும்பும் இவர்கள், மனது எப்பொழுதும் சுகத்தையும், மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே எண்ணும். திருமணத்திற்குப் பின் அதிகப் பெண் பிள்ளைகளைப் பெற்று வாழ்வர்.