ஆண்களுக்கான மச்சப் பலன்கள்

24 October 2019 ஜோதிடம்
male13.jpg

கழுத்து

வலதுபுறம்-பயணங்களில் ஆர்வம் அதிகம் இருக்கும். திறமைசாலியாக இருப்பர். நண்பர்களின் உதவி கிடைக்கப்பெறுவர். இடதுபுறம்-பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் சந்தித்தாலும் அனைத்தும் சமாளித்து மகிழ்ச்சியாக வாழ்வர்.

மார்பு

வலதுபுறம்-எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். செல்வத்துடன் வாழ்வர். இடதுபுறம்-அனைவரையும் மட்டம் தட்டும் குணம் இருக்கும். புதிய சொத்துக்கள் கிடைக்கப் பெறுவர்.

இடுப்பு

வலதுபுறம்-தொழிலில் திறமையாக செயல்பட்டு வெற்றிப் பெறுவர்.பகைவர் அனைவரையும் அடிமையாக்குவர். இடதுபுறம்-வரவுக்கு மிஞ்சிய செலவால் கடனாளியாவர்.

வயிறு

வலதுபுறம்-நிதானமாகச் செயல்படுவர். இரகசியங்களைப் பாதுகாக்கும் தன்மை உடையவர். கடுமையான உழைப்பாளி. இடதுபுறம்-எதிரிகளால் தொல்லை ஏற்படும்.

முதுகு

வலதுபுறம்-கலைகளிலும்,ஜோதிடத்திலும் ஆர்வம் இருக்கும். பல வழிகளில் செல்வம் சேர்ப்பர். இடதுபுறம்-அதிக நண்பர்கள் இருப்பார்கள். சேமிப்பின்றி வாழ்வர். தொப்புளில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டசாலியாக இருப்பர்

கை

வலதுபுறம்-தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் உழைப்பாளிகள். இடதுபுறம்-அனைவரிடத்திலும் அன்புடன் பழகுவர். எதிர்காலம் பற்றியக் கவலை இருக்கும்.