ஆண்களுக்கான மச்சப் பலன்கள்

24 October 2019 ஜோதிடம்
male13.jpg

மச்சம் நம் உடலில் பிறக்கும் பொழுதே, ஏற்படுகின்ற ஒரு இயற்கையான குறி ஆகும். அது இருக்கும், இடம், நாம் எவ்வாறு வாழப் போகின்றோம் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகவே, ஜோதிடத்தில் பார்க்கப்படுகின்றன. நாம் வளரும் பொழுது, சில சமயம் மச்சங்கள் தோன்றலாம். அது நம்முடைய உடலில் ஏற்படும், மாற்றங்களைக் குறிக்கும். இங்கு ஆண்களுக்கான மச்சப் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

நெற்றி

வலதுபுறம்-சுகமான வாழ்க்கை அமையும் திருமணத்திற்குப் பின் அந்தஸ்து உயரும்.

இடதுபுறம்-பிடிவாத குணமும்,திமிரும் இருக்கும்.பணப்பற்றாக்குறை இருக்கும். நெற்றியின் நடுவில் இருந்தால், திருமணத்திற்குப் பின் யோகமான வாழ்க்கை அமையும். அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமையும்.


இரப்பை

வலதுபுறம்-நிதானமாகச் சிந்தித்து செயல்படுவர்.அதிக நம்பிக்கை உடையவர். இடதுபுறம்-தேவையின்றி கோபப்படுவர்.பின்பகுதி வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும். பெண் நண்பர்கள் அதிகம் இருக்கும்.

மூக்கு

வலதுபுறம்-நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கடைசியில் தான், காரியங்கள் அனைத்தும் கைக்கூடும்.இடதுபுறம்-எவ்வளவு உழைத்தாலும், அதற்கேற்றப் பலன் மிகத் தாமதமாகவேக் கிடைக்கும். மூக்கின் நடுவில் மச்சம் இருந்தால், கோபக்க்காரர்களாகவும் அதே சமயம், அதிக ஆர்வம் உடையவர்களாகவும் இருப்பர். இவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

மேல் உதடு

வலதுபுறம்-நினைத்ததைச் சாதிக்கும் குணம் உடையவர், பாசமானவர்.இடதுபுறம்-பயந்த சுபாவம் உடையவர். மேல்உதட்டின் நடுவில் மச்சம் இருந்தால், அது நல்ல மனதைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லி, விளங்க வைப்பதில் வல்லவர்கள்.

கீழ் உதடு

வலதுபுறம்-பொய் பேசுவர், இவர்கள் சற்று கள்ளத்தனமானவர்கள் ஆவர். பொய் பேசுவர், இவர்கள் சற்று கள்ளத்தனமானவர்கள் ஆவர். காதல் உணர்வு மிக்கவர்கள் என்று கூட கூறலாம்.இடதுபுறம்-காரியக்காரர்கள்

காது

வலதுபுறம்-நல்ல செல்வாக்கு இருக்கப் பெறுவர். மற்றவர்களை நம்பமாட்டார்கள். இடதுபுறம்-ஆடை மற்றும் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். பெண்கள் மீதான நாட்டம் அதிகம் இருக்கும்.

கன்னம்

வலதுபுறம்-அரசனைப் போன்ற வாழ்வு.தீர்க்கத்தரிசியாக வாழ்வர்.உதவிகள் தானாகத் தேடி வரும். இடதுபுறம்-ஏற்ற இறக்கமான வாழ்க்கை அமையும். தர்மம் செய்யும் அளவிற்கு செல்வம் இருக்கப் பெருவர்.

தாடை

வலதுபுறம்-குடும்பத்திற்காக அனைத்துக் கஷ்டத்தையும் ஏற்பர். சாதாரணமாக, கஷ்டமான விஷயங்கள் அனைத்தும் செய்து முடிப்பர். இடதுபுறம்-எதிர்ப்பார்த்த காரியம் எளிதாக நடக்காது.தாமதமாகவே நடைபெறும். வாழ்வின் பின்பகுதி நல்ல முன்னேற்றத்துடன் அமையும்.

நாக்கு

நாக்கில் மச்சம் உள்ளவர்கள் கூறும் விஷயங்கள் பழிக்கும். நல்லச் சொற்களைக் கூறுவதன் மூலம் நல்ல வாழ்க்கையை அடையலாம்.