தைப்பூசத் திருவிழா கோலாகலம்! முருகனின் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்!

26 March 2020 ஜோதிடம்
coronaastrology1.jpg

உலகில் நடைபெறும் அனைத்து செயல்களுமே, நவக்கிரகங்களுக்குக் கட்டுப்பட்டே நடைபெறும். அப்படிப்பட்ட நவக்கிரகங்கள் அனைத்தும், பரம்பொருளுக்குக் கட்டுப்படுவர்.

அப்படிப்பட்ட அமைப்பில் தான் மனிதன் மட்டுமின்றி, அனைத்து பிரபஞ்சமும் இயங்கி வருகின்றது. இதில், நம்முடையப் புவியில் தற்பொழுது கலியுகம் நடைபெற்று வருகின்றது. இந்த யுகத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என, ஜோதிடர்களால் நம்பப்படுகின்றது. தற்பொழுது ராகு பகவான் மிதுன ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளார்.

அவருடைய சகோதரரான கேது பகவான், அவருக்கு நேர் எதிராக, தனுசு ராசியில் உள்ளார். வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியில், ராகு பகவான் ரிஷபத்திற்கும், கேது பகவான் விருச்சிகத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றனர். அதுவரை, மிதுனத்தில் ராகுவும், தனுசில் கேதுவும் இருக்க உள்ளனர். தற்பொழுது உலகம் முழுக்க, கொரோன வைரஸ் எனும் ஆட்கொல்லி வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸானது, சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து பரவ ஆரம்பித்தது.

இது பற்றிய ஜோதிட ஆய்வினை தற்பொழுது பார்ப்போம். சனி பகவான் திருக்கணித முறைப்படி, மகரத்தில் இருக்கின்றார். குரு பகவான் அதிசாரமாக நகர்ந்து, தனுசு ராசி மண்டலத்தில் இருந்து மகர ராசி மண்டலத்திற்குள் நுழைகின்றார். சுமார் 92 நாட்கள் அங்கு இருக்க உள்ளார். மார்ச் 29ம் தேதி நல்லிரவு முதல் ஜூன் 29ம் தேதி வரை அங்கேயே இருக்க உள்ளார். பின்னர், மீண்டும் தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கே பெயர்ச்சி அடைவார்.

இது ஒரு இயல்பான அமைப்பாகும். இதனால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், பல நன்மைகள் உண்டாகும். தற்பொழுது செவ்வாய் பகவான் மகரத்தில் உச்ச பலத்துடன் இருக்கின்றார் அவருடையப் பார்வையானது, மிதுனத்தின் மீதும் விழுகின்றது. போதாத குறைக்கு மகரத்தின் அதிபதியான சனி பகவானும், மகரத்தில் ஆட்சியில் இருக்கின்றார்.

இவர்களுடன் சுபப் பலன்களை அள்ளித் தரும் குரு பகவானும் இணைகின்றார். ராகு பகவான் கடந்த சில மாதங்களாகவே, பலப் பிரச்சனைகளை உலகளவில் வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ, திருவாதிரை நட்சத்திரம் அழிந்துவிட்டதா, இல்லையா என்றக் குழப்பம் என்று அவருடையப் பட்டியலில் இணைந்திருப்பது கொரோனா வைரஸ்.

இந்தக் கொரோனா வைரஸால் பல்லாயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது செவ்வாயின் பார்வையில் உள்ள ராகு பகவானே. மிதுனம் ஒரு காற்று ராசி. அதனால் தான், இந்த வைரஸானது காற்றில் மிக வேகமாகப் பரவுகின்றது. இதனால் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தப் பிரச்சனைகள் அனைத்தும், செவ்வாய் பகவான் கும்பத்திற்குச் செல்லும் வரையில் தான் இருக்கும்.

அப்போ, அதுவரைக்கும் இந்த மரணம் தொடருமா என்றால், கண்டிப்பாக தொடராது. காரணம், செவ்வாய் மற்றும் சனியுடன் இணையும் குரு பகவான், தன்னுடைய சுபத் தன்மையினை அவர்களுக்குத் தந்து, அவர் பலவீனம் அடைந்துவிடுவார். நீச்ச பங்க ராஜயோகத்தில் குரு பகவான் இருக்க உள்ளார். இதனால், செவ்வாயின் வீரியம் அங்கு குறைந்துவிடும். சுபத் தன்மையை அடையும் சனி பகவான், செவ்வாயினைக் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்.

இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். செவ்வாய் உச்ச பலத்தில் இருக்கும் பொழுது, எவ்வாறு ஆட்சியில் இருக்கும் சனி பகவானால் செவ்வாயினைக் கட்டுப்படுத்த இயலும் என்று. உண்மையில், இடம் கொடுத்தவரின் மதிப்பு என்பது மிக முக்கியமானது, மேலும் அவருடன் இணைய உள்ள குருவின் சுபத்தன்மையும் முக்கியமானது. இதனால், வீரியத்தினை அதிகரிக்கும் செவ்வாய் பகவான், சுபத்தன்மையின் காரணமாக, ராகுவினைக் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்.

இதனால், வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், சீனாவில் ஏற்படும் மரணங்களின் அளவு மிக சொற்பமாக குறையும். தொடர்ந்து, ஏப்ரல் 14ம் தேதி அன்று, சூரிய பகவான், மேஷத்திற்குப் பெயர்ச்சி அடைந்து உச்சபலத்தினை அடைய உள்ளார். இதனால், மருத்துவக் கண்டுபிடிப்புகள் வெளிவர ஆரம்பிக்கும். செவ்வாய் பகவான் கும்பத்திற்குப் பெயர்ச்சி அடைந்ததும் ராகுவின் வீர்யம் படிப்படியாகக் குறைந்துவிடும்.

மேலும், திருவாதிரை நட்சத்திரமானது, ராகுவின் நட்சத்திரமாகும். தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் இருப்பதனால் தான், கொரோனா வைரஸ் தொற்று, திருவாதிரை நட்சத்திரம் அழிந்ததா இல்லையா என்ற குழப்பங்களையும், பிரச்சனைகளையும் உருவாக்கி வருகின்றார். அவர், திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து, மிருகசீரிஷத்திற்குள் நுழையும் பொழுது, ஓரளவு ராகுவின் வீரியம் குறைய ஆரம்பிக்கும்.

அந்தக் காலக்கட்டத்தில் கொரோனா வைரஸானது கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துவிடும். பின்னர், ரிஷபத்திற்குள் ராகு பகவான் வரும் பொழுது, ஆதாவது செப்டம்பர் மாதம் நடைபெறும் ராகு கேதுப் பெயர்ச்சிக் காலக்கட்டத்தில், இந்த நோய்க்கு முழுமையான மருந்து வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.

இப்பொழுது நிலவும் பதற்றமான சூழ்நிலையானது, ஏப்ரல் மாத்திலேயே இந்த நோயானாது கட்டுப்படுத்தப்பட ஆரம்பிக்கும். இந்தியாவில் இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது சனி பகவான். இந்தியா ராசியின் படி, மகரத்தினைக் குறிக்கும் அமைப்பாக கருதப்படுகின்றது. மகரத்திலுள்ள செவ்வாய் பெயர்ச்சி அடைந்ததும், கொரோனாவின் பாதிப்பு குறைந்துவிடும். யாரும் பயப்பட வேண்டாம். இந்த கொரோனா வைரஸ் கூட, ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தும் அமைப்புத் தான்.