விகாரி வருட ராசிபலன் தனுசு 2019-2020

24 October 2019 ராசிபலன்
thanusu.jpg

தனுசு ராசியானது, ராசிக் கட்டத்தில் ஒன்பதாவது, ராசியாகும். இது ஒரு ஆண் ராசி. இது ஒரு நெருப்பு ராசியும் கூட. இதன் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசியாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே, சென்று விடுகிறார்.

பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசிக்கு ஏழாம், இடத்தில் இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள், முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

உங்களுக்கு ஏற்கனவே ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஏற்கனவே அழுது கொண்டு தான் இருக்கின்றீர்கள். எனினும், ஒரு சிலருக்கு மாபெரும் நன்மைகள், அவர்களுடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து நடைபெற்று வருகின்றது. இந்த வருடத்தின் முதல் மாதத்தில் கேது, சனியுடன் குரு பகவான் உங்கள் ராசியில் இணைந்துள்ளார்.

இந்த நேரம், உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலநிலையாகும். மனதினை அமைதியாக வைத்துக் கொள்ள தியானம் செய்யுங்கள். இழப்பதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்கள் வீட்டின், கதவைத் தட்டும். இது உங்கள் மனதிற்கு ஒரு வித ஆறுதலைத் தரும்.

மே மாதம் மீண்டும், குரு பகவான், தனுசிலிருந்து, விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், பழைய குருடி, கதவத் திறடி என்பது போல, மீண்டும், பிரச்சனையான காலம் உருவாகும். ஆனால், கவலைப்பட வேண்டாம். இதுவும் மாறக்கூடிய ஒன்று தான்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 7ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இது உங்கள் தனுசு ராசிக்கு 12ம் இடமாகும். இதன் காரணமாக, ஆன்மீகச் செலவுகள், சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறக்கத்திற்கு எவ்விதக் குறையும் இருக்காது.

மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்ய விடமாட்டார். ஜென்மத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லது என்று கூற முடியாது. நீங்கள் அனுபவ பாடத்தை கற்பீர்கள். ஏற்கனவே சனீஸ்வரன் வேறு உங்கள் ராசியிலேயே இருக்கிறார்.

அவர், உங்கள் ராசிக்கு 2க்கும், மூன்றுக்கும் அதிபதி. இதன் காரணமாக, வருமானம் என்பதை நீங்கள் பார்த்து பல மாதங்கள் ஆகியிருக்கும். உங்களுக்கு தைரியம் என்பது, இப்பொழுது இருக்காது. நல்ல உணவு கிடைக்காது. உங்களால், புதிதாக எதையும் யோசிக்க முடியாது. இதற்கு காரணம், உங்களுக்கு கிடைத்தவைகளை நீங்கள் அசால்ட்டாக நினைத்ததே ஆகும். நீங்கள் செய்த தவறுகளை, நீங்கள் உணரும் பொழுது, சனீஸ்வரனின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம், இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது ஏழரைச் சனியின் கடைசி நிலை ஆகும். கவலை வேண்டாம்.

பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. தலையில் இருந்த பாரம் இறங்க ஆரம்பிக்கும். உங்கள் குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும். உங்கள் துணையின் மன நிலை மற்றும் உடல்நிலை, அக்டோபர் குருப் பெயர்ச்சிக்குப் பின் சிறப்பாக மாறும்.

பண வரவு இந்த ஆண்டும், தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் தனுசு ராசிக்கு நூற்றுக்கு 65% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், காளியையும், வேங்கடேஷ்வரனையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.