சிம்ம ராசியானது, ராசிக்கட்டத்தில் ஐந்தாவது, ராசியாகும். இது ஒரு ஆண் ராசி. இது ஒரு நெருப்பு ராசியும் கூட. இதன் அதிபதி சூரிய பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.
சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.
ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் பதினொன்றாம் இடத்தில், இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.
தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள் முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.
சிம்மம் ஒரு நெருப்பு ராசி அதே சமயம், ஒரு ஸ்திர ராசியும் கூட. ராஜ கிரகங்களான, சனி, குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நெருப்பு ராசியில், அதுவும் உபய ராசியில் சஞ்சரிக்கின்றன.
ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த கிரகங்களால், உங்கள் குழந்தைகளுக்கு சில அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும். இருப்பினும், அவர்கள் சோம்பலாகவே இருப்பர். 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பின் அனைத்தும் மாறும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 11ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், பல வழிகளில் லாபம் உண்டாகும். இருப்பினும், இந்த லாபத்தை ராகு தருவதால், பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, எதையும் யோசித்துச் செய்யவும்.
மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.
சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், நல்ல உணவு, உடை ஆகியவை கிடைக்கும். மன மகிழ்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குருவின் இந்த சஞ்சாரத்தால், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும்.
தீபாவளி வரை, குரு பகவான் தொடர்ந்து இதே நிலையில், இருக்க உள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார்.
அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்ய விடமாட்டார். தனுசு ராசி உங்கள் ராசிக்கு, ஐந்தாம் வீடாக உள்ளது. இதன் காரணமாக, தெய்வீக வழிபாட்டில், ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் இருப்பவர்கள், சிறப்படைவர்.
உங்கள் குழந்தைகள் சோம்பேறித்தனமாக காணப்படுவர். அவர்கள் உடல்நிலை, பலமில்லாதது போல், உணர்வார்கள்.
அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்குப் ஆறாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், உங்கள் எதிரிகளை எளிதாக, வென்றுவிடுவீர்கள். வாழ்க்கையில், தொழிலில், சமூகத்தில் உள்ள எதிரிகளை இனம் கண்டு அழிப்பீர்கள்.
சனீஸ்வரன் மகரத்தில் ஆட்சி அமைக்கிறார். இதனால், அதிக கெடுதல்கள் நடக்காது. போக்குவரத்தில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. முக்கியமான விஷயம் என்னவென்றால், யாரிடமும் கை நீட்டி கடன் வாங்கி விட வேண்டாம். உடல்நலத்தில் அக்கறைத் தேவை.
பண வரவு இந்த ஆண்டும், தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.
ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் சிம்ம ராசிக்கு நூற்றுக்கு 81% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், சிவபெருமானையும், சூரிய நாராயணரையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.