விகாரி வருட ராசிபலன் மீனம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
meenam.jpg

மீன ராசியானது, ராசிக் கட்டத்தில் பன்னிரெண்டாவது ராசியாகும். இது ஒரு பெண் ராசி. இது ஒரு நீர் ராசியும் கூட. இதன் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை, குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே, சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசிக்கு நான்காம், இடத்தில் இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள், முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

இந்த ஆண்டில், உங்கள் ராசிக்குப் பத்தில், குரு, சனி மற்றும் கேது இணைந்துள்ளனர். இதன் காரணமாக, அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இருப்பினும், நீங்கள் அதிக அளவில், முதலீடு செய்ய வேண்டாம். அவ்வாறு செய்ய வேண்டிய நிலை என்றால், உங்கள் ஜாதகத்தைப் பார்த்து செய்யவும். லாபத்திற்கும் தொழில் விருத்திக்கும் எவ்விதக் குறையும் இருக்காது. தொழிலில் இருந்த போட்டிகள், பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

குரு, தன்னுடைய சொந்த வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், பெரிய அளவிலான கெடுதல்கள் நேர அனுமதிக்ககமாட்டார். இருப்பினும், இருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறேத் தன்னுடையப் பலன்களைத் தருவார். இந்த முறை, சனீஸ்வரன் 10ல் இருப்பது நல்லது தான்.

இதன் காரணமாக, வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்லதொரு வேலைக் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும். இருப்பினும், தேவையில்லாமல், வேலையை மாற்ற வேண்டாம். பதவி உயர்விற்காக காத்திருந்தவர்களுக்கு அக்டோபரில் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பின் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும்.

மே மாதம் மீண்டும், குரு பகவான், தனுசிலிருந்து, விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், லாபம் வருவதற்கு குறையிருக்காது. உங்களுடையத் தந்தையின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். மேலும், அவருடைய நிலங்கள், வீடு மற்றும் மனை முதலிய சொத்துக்கள் ஒரு சிலருக்குக் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 4ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. அவருடன் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, கவனமாகப் பேசவும். தற்பொழுதுள்ள சுகத்திற்கு சிறிய அளவில் பிச்சனைகள் வரலாம். அதாவது, வாகனம் வாங்குதல், வீடு, மனை வாங்குதல் போன்றவற்றில் பிரச்சனைகள் வரலாம்.

மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்ய விடமாட்டார். அது உங்கள் ராசிக்கு 10ம் இடமாகும். இதன் காரணமாக, ஏற்கனவே சொன்ன, அனைத்து நன்மைகளும் உங்களுக்கு, எவ்விதத் தடையுமின்றி உண்டாகும்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக, லாபம் குறைய ஆரம்பிக்கும். அதிக அளவில் உழைக்க வேண்டி வரும். அல்லது உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். உங்கள் மூத்த சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனீஸ்வரன் தன்னுடைய வீட்டிற்கு வருவதால், பிரச்சனைகளைத் தரமாட்டார். மாறாக, மற்றக் கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் மாட்டார்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் மீன ராசிக்கு நூற்றுக்கு 90% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், வேங்கடேஷ்வரனையும், பின்னர் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.