மகர ராசியானது, ராசிக் கட்டத்தில் பத்தாவது ராசியாகும். இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும் கூட. இதன் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே, சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார்.
அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.
சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.
ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசிக்கு 6, இடத்தில் இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.
தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள், முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.
இந்த ஆண்டில், உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டில், குரு, சனி மற்றும் கேது இணைந்துள்ளனர். இதன் காரணமாக, நிம்மதியான தூக்கம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். எப்படிப்பட்ட இணைவாக இருந்தாலும், ஒரு கெடுதல் தந்தால், கண்டிப்பாக ஒரு நன்மையை தந்தே தீர வேண்டும்.
ஒரு நன்மையைத் தந்தால் ஒரு கெடுதலைத் தந்தே தீர வேண்டும் என்பது தான் பிரபஞ்ச விதி. எனவே கவலைப்பட வேண்டாம். ஏழரைச் சனியின் முதல் அத்யாசத்தில் நீங்கள் உள்ளீர்கள்.
இதன் காரணமாக, நீங்கள் புதிதாக எதையும் செய்ய வேண்டாம். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். இல்லை, கண்டிப்பாக முதலீடு செய்தே தீர வேண்டும் என்ற சூழ்நிலை என்றால், உங்கள் ஜாதகத்தை நீங்கள், நல்ல ஜோதிடரிடம் தந்து சரிபார்த்துக் கொள்ளவும்.
இந்த குரு, தன்னுடைய சொந்த வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், பெரிய அளவிலான கெடுதல்கள் நேர அனுமதிக்ககமாட்டார். இருப்பினும், இருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறேத் தன்னுடையப் பலன்களைத் தருவார். இந்த முறை, சனீஸ்வரன் 12ல் இருப்பது அவ்வளவு நல்லதல்ல.
இதனால், ஒரு சிலர் படுக்கையில் இருப்பதற்கு, அதாவது மருத்துவமனையில் காலத்தைக் கழித்திருப்பீர்கள். நேரத்திற்கு தூங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். படுத்தால், பலவிதமான சிந்தனைகள் வரும். இதற்கெல்லாம், காரணம் 12ல் சனி இருப்பது.
இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், முதலில் உங்கள் மனைவியுடன் நெருக்க நேரத்தை செலவழியுங்கள். அவருடன் மனம் விட்டுப் பேசுங்கள். அவருடன் கோவில்கள், குளங்கள் என சென்று வாருங்கள். பிறர் உறக்கத்திற்கு உதவுங்கள். சாலையோரங்களில், தங்கி உறங்கும் மக்களுக்கு, போர்வை போன்றவைகளை வாங்கித் தாருங்கள். பிரச்சனைகளின் வீரியம் குறையும். கேது 12ம் இடத்தில், மோட்ச ஸ்தானத்தில் உள்ளார். எனவே, நீங்கள் மனதிற்குப் பிடித்தக் கோவில்கள், தீர்த்தங்களுக்குச் சென்று வாருங்கள்.
மே மாதம் மீண்டும், குரு பகவான், தனுசிலிருந்து, விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், லாபம் வருவதற்கு குறையிருக்காது. உங்களுடையத் தைரியம் அதிகரிக்கும். ஒரு சிலப் பெண்கள் கர்ப்பம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அழகிய குழந்தைகள் பிறக்கும்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு 6ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், நீங்கள் உங்கள் எதிரிகளை எளிதாக வென்றுவிடுவீர்கள். மேலும், எதிரிகளின் பொருட்கள் ஒரு சிலருக்கு, கிடைக்கும். இருப்பினும், கொடுப்பவர் ராகு என்பதால், நீங்கள் குறுக்கு வழிகளில் செல்ல வேண்டாம்.
மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.
சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.
மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்ய விடமாட்டார்.
அது உங்கள் ராசிக்கு 12ம் இடமாகும். இதன் காரணமாக, ஏற்கனவே சொன்ன, தூக்கமின்மை, ஆன்மீக யாத்திரை, போன்ற நிகழ்வுகள் நிகழும். ஒரு சிலருக்கு கால்களில் வீக்கம் முதலானப் பிரச்சனைகள் ஏற்படும்.
அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இது ஏழரைச் சனியின் இரண்டாவது அத்தியாயம் ஆகும். இது சற்றுக் கடினமாகத் தான் இருக்கும்.
ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனீஸ்வரன் உங்கள் வீட்டிற்கு அதிபதி என்பதால், பிரச்சனைகளைத் தரமாட்டார். மாறாக, மற்றக் கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் மாட்டார். 12ல் இருக்கும் சனியை விட, ஜென்மத்தில் இருக்கும் சனி, எவ்வளவோ மேல். இந்த இரண்டரை வருடத்தில், நீங்கள், புதிதாக எதையும் தொடங்க வேண்டாம். வீடு வாங்க நினைப்பவர்கள், தகுந்த ஆலோசனைக்குப் பின் வாங்கலாம்.
ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் மகர ராசிக்கு நூற்றுக்கு 73% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், விநாயகரையும், சிவபெருமானையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.