விகாரி வருடப் பஞ்சாங்கம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
1zodic.jpg

அனைவருக்கும் வணக்கம்! இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 14ம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பிறக்கும் புதிய தமிழ் புத்தாண்டின் பெயர், விகாரி வருடம் ஆகும். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டின் வரிசையில் 33வது ஆண்டாகும். இதற்கு சுத்தமான தமிழில், எழில்மாறல் என்று பெயர்.

பெயரில் இருந்தே இதன் அர்தத்தை நீங்கள், அறிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்த ஆண்டு சற்று விளையாட உள்ளது. பொதுவாக பஞ்சாங்கம் என்பது, மேம்பட்ட வானவியல் அறிவு என ஜோதிட வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது. ஒரு வருடம் முழுக்க நடக்க இருப்பதை இந்த பஞ்சாகத்தில் கணித்துக் கூறிவிடுவர். விளம்பி வருடத்தைப் பற்றிப், புட்டுப் புட்டு வைத்திருந்தனர் ஜோதிட வல்லுநர்கள். அதே போல், இந்த விகாரி வருடத்தையும் தெளிவாக பஞ்சாகத்தில் கணித்துள்ளனர்.

இந்த பஞ்சாகத்தின் படி, விகாரி வருடம் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை திங்கள் ஒன்றாம் தேதி பிறக்க உள்ளது. நவமி மற்றும் தசமி திதியில், ஆயில்யம் நட்சத்திரத்தில், சித்த மற்றும் மரண யோகத்தில் இந்த விகாரி ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டின் அதிபதியாக சனீஸ்வரன் இருக்க உள்ளார். இவர், கடின உழைப்பு, ஆயுளுக்கு அதிபதி. இவரின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்க உள்ளதால், இந்த ஆண்டில் யாரும், தவறான வழியில் சென்றால், கண்டிப்பாக மாட்டிக் கொள்வர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த ஆண்டின், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், வெயிலின் கொடுமையால் பலர் உயிரிழப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், வெப்பக் காற்றினால் பூக்கள் வெம்பிப் போகும். இதமாக காற்று வீசாது. எனப் பஞ்சாங்கம் கூறுகிறது. புயல் மழை பயங்கரமாக இருக்கும் எனவும், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் புயல் மழையின் காரணமாக, தமிழகம் தண்ணீரில் மிதக்க உள்ளது.

பருவ மழையைக் காட்டிலும், புயல் மழையும் இந்த ஆண்டு வெளுத்து வாங்கும் எனவும், தீபாவளிக்குப் பின் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் அடைமழையின் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான, நதிகள் வெள்ளத்தில் மிதக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. எப்பொழுதும், தீபாவளியின் பொழுது சிறிதளவு மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு, தீபாவளியின் பொழுது, கொடூர மழை பெய்யும் எனவும், விவசாயத்திற்கு தண்ணீரும், மழையுமே, தடையாக இருக்கும் எனவும், கணிக்கப்பட்டுள்ளது.

மழை இல்லாத காலத்தில், மழை சேகரிக்க வேண்டிய குளங்களையும், அணைகளையும் பராமரிக்காமல் இருந்து விட்டு மழைக் காலத்தில் வரும் நீரையும் தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் விட்டுவிட்டு, பின்னர் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை எனக் கூறினால், என்னப் பலன்?

வருமுன் காப்பதே நன்று. இதற்காகவே பஞ்சாங்கமும், ஜோதிடக் கலையும் உருவாக்கப்பட்டது.