தைப்பூசத் திருவிழா கோலாகலம்! முருகனின் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்!

08 February 2020 கோயில்கள்
vallalardeepam1.jpg

இன்று காலையில், வடலூரில் உள்ள வள்ளலார் கோயில் தைப் பூசத் திருவிழா நடைபெற்றது. இதில், வள்ளலார் ஜோதி ஏற்றப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில், வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை உள்ளது. அங்கு, ஒவ்வொரு வருடமும் தைப் பூசத்தன்று விளக்கு ஏற்றப்படும். அதன்படி, இன்று காலை ஆறு மணிக்கு, அங்குள்ள ஏழு திரைகளும் விலக்கி, ஜோதி ஏற்றப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

இன்று இதனையடுத்து மொத்தம் ஆறு கால பூஜைகள் நடைபெற உள்ளன. காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கு இந்தப் பூஜைகள் நடைபெற உள்ளன. அதே போல், நாளை காலை 5.30 மணிக்கும் ஏழு திரைகளும் விலக்கப்பட்டு, விளக்கு ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கடலூரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பக்தர்கள் திரளாக வள்ளலார் கோயிலிலுக்குச் சென்று, ஜோதி தரிசனத்தை பார்த்து வருகின்றனர்.