வல்லபை கணேசர் பிரசாத மாலை

01 February 2020 மந்திரம்
vallabaganpathi1.jpg

திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான் பெருநடு மேனி தளிர்படப் பாம்பின் பேருரு அகன்றமை மறவேன் கருநெடுங் கடலைக் கடற்றுநற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.

நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணைஅடிவழுத்திக் களிநலன் உடன்இவ்வுலகெலாம் படைக்கக் கடைக் கணித்ததை உளம்மறவேன் அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே வளிநிறை உலகுக்கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.

சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள்இ றைமைதந் தருளில் பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன் ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே வார்உருத் திடுப்பூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.

விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன்கனவிலும் நனவிலும் மறவேன் தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.

நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச் சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன் தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.

கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச் செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன் நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.

அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன் பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.

முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன் என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே

கணவன் மற்றும் மனைவியுடன், மிக நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எட்டாம் இடத்தில், குரு பகவான், கேது பகவான், சனி பகவானுடன், செவ்வாய் பகவானும் இணைகின்றார். இதனால், இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நலம் அளிக்கும். உடல்நலத்தில் அக்கறைத் தேவை. நிம்மதியான உறக்கம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் சிறப்படையும். கடன்களை அடைக்கும் வழிகள் பிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தாயின் உடல்நிலை நன்றாக இருக்கும்.

தொழிலில் தடைகள், இடையூறுகள் தொடரும். சோம்பேறித்தனம் இல்லாமல் உழைக்கவும். எதிரிகளை எளிதாக வெல்லும் வழிகள் பிறக்கும். உங்கள் இளைய சகோதரருடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

இந்த மாதம் உங்கள் ராசிக்கு நன்றாகவே உள்ளது. மேலும் பல நன்மைகள் நடக்க, மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை அன்று வணங்கவும். குல தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.