எந்த நட்சத்திரத்திற்கு எந்த மரம் நட வேண்டும் தெரியுமா?

24 October 2019 ஜோதிடம்
tree.jpg

ஜோதிடத்தில் மொத்தமுள்ள 12 ராசிகளில், 27 நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொன்றும், மேலும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாதமும், ஒவ்வொரு பலனை வழங்க வல்லவை. உதாரணத்திற்கு, சதயம் நட்சத்திரம் முதல் பாதத்தில் ஒருவர் பிறந்திருந்தால், அவருடைய வாழ்க்கை ஒரு மாதிரியும், சதயம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை, வேறொரு மாதிரியும் இருக்கும். ஒவ்வொரு நட்சத்திரப் பாதத்திற்கும், ஒரு மரத்தினை ஞானிகள் கூறியுள்ளனர்.

அத்தகைய மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம், நம்முடைய வாழ்க்கையும் நல்ல வளர்ச்சி பெறுவதாகவும் அவர்கள் தங்களுடைய நூல்களிலும், ஓலைச் சுவடிகளிலும் கூறியுள்ளனர். அப்படி அவர்கள் கூறியுள்ள மரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

அஸ்வினி

முதல் பாதம்-எட்டி மரம்
இரண்டாம் பாதம்-மகிழ மரம்
மூன்றாம் பாதம்-பாதாம் மரம்
நான்காம் பாதம்-நண்டாஞ்சு மரம்

பரணி

முதல் பாதம்-அத்தி மரம்
இரண்டாம் பாதம்-மஞ்சக்கடம்பு மரம்
மூன்றாம் பாதம்-விளா மரம்
நான்காம் பாதம்-நந்தியாவட்டை மரம்

கார்த்திகை

முதல் பாதம்- நெல்லி மரம்
இரண்டாம் பாதம்-மணிபுங்கம் மரம்
மூன்றாம் பாதம்-வெண் தேக்கு மரம்
நான்காம் பாதம்-நிரிவேங்கை மரம்

ரோகிணி

முதல் பாதம்- நாவல் மரம்
இரண்டாம் பாதம்- சிவப்பு மந்தாரை மரம்
மூன்றாம் பாதம்- மந்தாரை மரம்
நான்காம் பாதம்- நாகலிங்க மரம்

மிருகசீரிஷம்

முதல் பாதம்- கருங்காலி மரம்
இரண்டாம் பாதம்- ஆச்சா மரம்
மூன்றாம் பாதம்- வேம்பு மரம்
நான்காம் பாதம்- நீர்க்கடம்பு மரம்

திருவாதிரை

முதல் பாதம்- செங்கருங்காலி மரம்
இரண்டாம் பாதம்- வெள்ளை மரம்
மூன்றாம் பாதம்- வெள்ளெருக்கு மரம்
நான்காம் பாதம்- வெள்ளெருக்கு மரம்

புணர்பூசம்

முதல் பாதம்- மூங்கில் மரம்
இரண்டாம் பாதம்- மலைவேம்பு மரம்
மூன்றாம் பாதம்- அடப்ப மரம்
நான்காம் பாதம்- நெல்லி மரம்

பூசம்

முதல் பாதம்- அரசு மரம்
இரண்டாம் பாதம்- ஆச்சா மரம்
மூன்றாம் பாதம்- இருள் மரம்
நான்காம் பாதம்- நொச்சி மரம்

ஆயில்யம்

முதல் பாதம்- புன்னை மரம்
இரண்டாம் பாதம்- முசுக்கட்டை மரம்
மூன்றாம் பாதம்- இலந்தை மரம்
நான்காம் பாதம்- பலா மரம்

மகம்

முதல் பாதம்- ஆலமரம்
இரண்டாம் பாதம்- முத்திலா மரம்
மூன்றாம் பாதம்- இலுப்பை மரம்
நான்காம் பாதம்- பவளமல்லி மரம்

பூரம்

முதல் பாதம்- பலா மரம்
இரண்டாம் பாதம்- வாகை மரம்
மூன்றாம் பாதம்- ருத்திராட்சம் மரம்
நான்காம் பாதம்- பலா மரம்

உத்திரம்

முதல் பாதம்- ஆலசி மரம்
இரண்டாம் பாதம்- வாத நாராயணன் மரம்
மூன்றாம் பாதம்- எட்டி மரம்
நான்காம் பாதம்- புங்க மரம்

ஹஸ்தம்

முதல் பாதம்- ஆத்தி மரம்
இரண்டாம் பாதம்- தென்னை மரம்
மூன்றாம் பாதம்- ஓதியன் மரம்
நான்காம் பாதம்- புத்திரசீவி மரம்

சித்திரை

முதல் பாதம்- வில்வ மரம்
இரண்டாம் பாதம்- புரசு மரம்
மூன்றாம் பாதம்- கொடுக்காபுளி மரம்
நான்காம் பாதம்- தங்க அரளி மரம்

சுவாதி

முதல் பாதம்- மருது மரம்
இரண்டாம் பாதம்- புளி மரம்
மூன்றாம் பாதம்- மஞ்சள் கொன்றை மரம்
நான்காம் பாதம்- கொழுக்கட்டை மரம்

விசாகம்

முதல் பாதம்- விளா மரம்
இரண்டாம் பாதம்- சிம்சுபா மரம்
மூன்றாம் பாதம்- பூவன் மரம்
நான்காம் பாதம்- தூங்குமூஞ்சி மரம்

அனுஷம்

முதல் பாதம்- மகிழ மரம்
இரண்டாம் பாதம்- பூமருது மரம்
மூன்றாம் பாதம்- கொங்கு மரம்
நான்காம் பாதம்- தேக்கு மரம்

கேட்டை

முதல் பாதம்- பலா மரம்
இரண்டாம் பாதம்- பூவரசு மரம்
மூன்றாம் பாதம்- அரசு மரம்
நான்காம் பாதம்- வேம்பு மரம்

மூலம்

முதல் பாதம்- மரா மரம்
இரண்டாம் பாதம்- பெரு மரம்
மூன்றாம் பாதம்- செண்பக மரம்
நான்காம் பாதம்- ஆச்சா மரம்

பூராடம்

முதல் பாதம்- வஞ்சி மரம்
இரண்டாம் பாதம்- கடற்கொஞ்சி மரம்
மூன்றாம் பாதம்- சந்தன மரம்
நான்காம் பாதம்- எலுமிச்சை மரம்

உத்திராடம்

முதல் பாதம்- பலா மரம்
இரண்டாம் பாதம்- கடுக்காய் மரம்
மூன்றாம் பாதம்- சாரபருப்பு மரம்
நான்காம் பாதம்- தாளை மரம்

திருவோணம்

முதல் பாதம்- வெள்ளெருக்கு மரம்
இரண்டாம் பாதம்- கருங்காலி மரம்
மூன்றாம் பாதம்- சிறுநாகப்பூ மரம்
நான்காம் பாதம்- பாக்கு மரம்

அவிட்டம்

முதல் பாதம்- வன்னி மரம்
இரண்டாம் பாதம்- கருவேல மரம்
மூன்றாம் பாதம்- சீத்தா மரம்
நான்காம் பாதம்- ஜாதிக்காய் மரம்

சதயம்

முதல் பாதம்- கடம்பு மரம்
இரண்டாம் பாதம்- பரம்பை மரம்
மூன்றாம் பாதம்- ராம்சீதா மரம்
நான்காம் பாதம்- திலக மரம்

பூரட்டாதி

முதல் பாதம்- தேமா மரம்
இரண்டாம் பாதம்- குங்கிலியம் மரம்
மூன்றாம் பாதம்- சுந்தர வேம்பு மரம்
நான்காம் பாதம்- கன்னி மந்தாரை மரம்

உத்திரட்டாதி

முதல் பாதம்- வேம்பு மரம்
இரண்டாம் பாதம்- குல்மோகர் மரம்
மூன்றாம் பாதம்- சேராங்கொட்டை மரம்
நான்காம் பாதம்- செம்மரம்

ரேவதி

முதல் பாதம்- பனை மரம்
இரண்டாம் பாதம்- தங்க அரளி மரம்
மூன்றாம் பாதம்- செஞ்சந்தனம் மரம்
நான்காம் பாதம்- மஞ்சபலா ரேவதி மரம்