இனி ஒரு லட்டு இலவசம்! ஒரு லட்டு 50 ரூபாய்! தேவஸ்தானம் அதிரடி!

07 January 2020 கோவில்கள்
tirupatiladdu.jpg

உலகப் பிரசித்திப் பெற்ற திருப்பதி லட்டானது இனி சலுகை விலையில் வழங்கப்ப டமாட்டாது என, திருப்பதி தேவஸ்தானம் அதிரடியாக அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதியானது, வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. இங்குள்ள வெங்கடேஸ்வரன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இந்து மதத்தவர்களால் பார்க்கப்படுகின்றார். இவருக்கு, கோடிக் கணக்கில் தினமும் உண்டியல் காணிக்கை வருவது வாடிக்கையான நிகழ்வாகும். அங்கு வரும் பக்தர்களுக்கு, உணவு, தங்குமிடம், கோயில் பிரசாதம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும், ஒரு திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். மேலும், அதிக லட்டு வேண்டும் என்றால், நான்கு லட்டு எழுபது ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இதுவே, காலம் காலமாக பின்பற்றப்படுகின்றது.

இந்நிலையில், தற்பொழுது அந்த வழக்கத்தினை மாற்றியுள்ளது திருப்பதி தேவஸ்தானம். இனி சலுகை விலையில், லட்டு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. மேலும், 70 ரூபாய்க்கு நான்கு லட்டு என்ற சலுகையை ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, ஒரு திருப்பதி லட்டு 50 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. ஆனால், லட்டு வாங்க விரும்புபவர்கள் எத்தனை லட்டுக்களை வேண்டும் என்றாலும், வாங்கிக் கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பினையும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதே போல், கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும், ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு இலவச லட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.