துலாம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
thulam.jpg

இந்த ராசியின் அதிபதி, சுக்கிரன் ஆவார். இவர்களும் கடக ராசியினரைப் போன்றே, காதல் மற்றும் ரொமான்ஸ் செய்வதன் அடிமைகள் என்றுக் கூட, கூறலாம். ஆனால், இவர்கள் யதார்த்தமானவர்கள். மனதில் இருப்பதை வெளியில் காட்டக் கூடியவர்கள். நம்பிக்கையுள்ளவர்கள்.

மனதில், பொதுவாக காதல் உணர்வு அதிகம் இருப்பதே இவர்களுடைய பலவீனமான விஷயம் ஆகும். ஆனால், எல்லாருக்கும் கடவுள் துணையைப் படைத்திருப்பார். எனவே, காத்திருப்போம் என, தனக்கான துணைக் கிடைக்கும் வரைக் காத்திருப்பர். மேலும், இவர்கள், ரொமான்ஸ் கடலுக்குள் மூழ்காமலே முத்தெடுக்கத் தெரிந்தவர்கள்.

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.

2.கோயில் அல்லது தானம் செய்ய நினைத்தால், வெண்ணை, தயிர், உருளைக்கிழங்கு ஆகியவைகளைத் தானமாக அளிக்கலாம்.

3.வெள்ளிக்கிழமை தோறும், வீட்டில் கோமியம் தெளித்து வர, செல்வம் பெருகும்.

4.மாமியார் வீட்டில் இருந்து, வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது, வளமான வாழ்வு தரும்.

5.நீங்கள் ஆண் என்றால், மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது, ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக் கொள்ள, அதிர்ஷ்டம் தரும்.

6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.

7.நீங்கள் ஆண் என்றால், பெண்களை மதித்துப் பேசுங்கள். அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.

8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே, திருமணம் செய்து கொள்வது நல்லது.

9.வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு, வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.

10.தானமாக எதையும் பெறாதீர்கள். அது வறுமையை ஏற்படுத்தும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.