இன்று காலை திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது! சுமார் ஒரு கோடி செலவில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று கோவில் புதுப்பிக்கப்பட்டது.
தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள மற்ற ஒன்பது கோவில்களுக்கும் கடந்த 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலையில், யாகங்கள் முடிந்தது. மேலும், புதுச்சேரி மாநில முதல்வர் உட்பட பலப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
14 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சிக்காக சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.