கேட்டதை உடனே தரும் திருமாலின் அவதாரங்கள்!

24 October 2019 சாஸ்திரங்கள்
perumal.jpg

திருமாலின் பத்து அவதாரங்களில், மூன்று அவதாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைகள் மூன்றுமே, பக்தர்கள் வேண்டியதை உடனே வழங்கும் சக்திப் படைத்தவையாக வைண பக்தர்களால் பார்க்கப்படுகிறது.

ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஸ்ரீநரசிம்மர் ஆகிய மூவருமே, தன்னுடைய பக்தர்களுக்கு எவ்விதக் குறையையும் வைப்பதில்லை. அவர்கள் எதைக் கேட்டாலும், அதனை அவர்களுக்கு வழங்கிவிடுகின்றனர்.

ஸ்ரீராமர்

த்ரேதா யுகத்தில் சீதையின் கணவனாக அவதரித்த ராமர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை, ஒரு போதும் தாக்காதவர். தன்னை நம்பி வந்தவர்களுக்கு, வேண்டிய அனைத்தையும் தந்து காத்து ரட்சிப்பவர். இவரை ஆஞ்சநேயர் கடவுளாக ஏற்று வணங்கி வந்தார். துவாபர யுகத்தில், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய கிருஷ்ணணும் கூட, கடவுள்களில் இராமன் நான் என்றேக் கூறுகின்றார்.

அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தவர் ஸ்ரீராமர். இவர் இருக்கும் இடத்தில் மங்களம் இருக்கும். இவர் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும். இவர் இருக்கும் இடத்தில் மகா லெட்சுமியும் இருப்பாள். இவ்வளவு ஏன், எல்லாம் வல்ல ஈசனுக்குப் பிடித்தப் பெயரே ராமர் என்ற பெயர் தான்.

ஸ்ரீகிருஷ்ணர்

இவரை எல்லாரும் கேட்டதைக் கொடுப்பவன் என, அன்புடன் அழைக்கின்றனர். தன்னை நாடி வந்தவர்களின் துயர் துடைப்பதில், இவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை. கீதையினை உபதேசித்து உலகை காத்தவர். மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு சாரதியாக இருந்ததால், இவரைப் பார்த்த சாரதி என அழைப்பர். இவருக்கு வெண்ணெய் என்றால் பிடிக்கும். அதனால், அவருக்கு வெண்ணெயை வைத்து வணங்குகின்றனர். வெண்ணெயை வீட்டில் வைத்திருந்தால், கண்ணன் வந்துவிடுவான் என்பது நம்பிக்கை. அதே போல், வீட்டில் பசு மாடு வைத்திருந்தாலும், கண்ணன் அதனைப் பார்க்க வருவான் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவரும் ராமரைப் போல, அமைதியான வழியில் வழிபடக் கூடிய தெய்வமாக இருக்கிறார்.

ஸ்ரீநரசிம்மர்

தன்னுடையப் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்ற திருமால் எடுத்த அதிரடி அவதாரமே இந்த நரசிம்மர் அவதாரம். அரக்கனை அழித்த நரசிம்மரின் கோபத்தைக் கண்டு, மகா லட்சுமியும் அருகில் செல்லத் தயங்கினார். அப்பொழுது, பிரகலாதன் மட்டுமே, நரசிம்மரின் கோபத்தை தணித்தார். தன்னுடையப் பக்தனின் வேண்டுதல்களை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி வைப்பதில், நரசிம்மருக்கு நிகர் நரசிம்மர் தான்.