தனுசு ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
thanusu.jpg

இந்த ராசியின் அதிபதி, குரு பகவான் ஆவார். இவர்களுக்கு, சூதாடுவது மற்றும் ஊர் சுற்றுவதில், அலாதியான விருப்பம் இருக்கும். இவர்களுக்கு, ஒரே இடத்தில் இருப்பது, ஒரே வேலையை செய்வது என்பது முற்றிலும் பிடிக்காது. புதிது, புதிதாக கற்றுக் கொள்ள விரும்புவதில், இவர்கள் கெட்டிக்காரர்கள்.

இவர்களுடையப் பலவீனமே, சூதாடுவது தான். இவர்கள், நேரம், காலம் போவதுத் தெரியாத அளவிற்கு, சூதாடுவதில் விருப்பம் உள்ளவர்கள். வெற்றித் தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இவர்களுக்கு வெட்டியாக, அதுவும் சூதாடிக் கொண்டே பொழுதைப் போக்குவதில், விருப்பம் அதிகம் உண்டு.

இவர்கள் அதனைக் குறைத்துக் கொண்டும், ஒழுங்குமுறைப்படுத்தினாலே, வாழ்க்கையில் ஏற்படும், தேவையற்றப் பிரச்சனைகளில் இருந்துத் தப்பிக்கலாம்.

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.தொடர்ந்து 43 நாட்களுக்கு, செம்பு நாணயங்களை ஓடும் நீரில், விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

2.தந்தையின் படுக்கை, ஆடைகள் மற்றும் உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.

3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல், இயன்றதைத் தர்மம் செய்யவும்.

4.திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஆலயத்திற்கு சென்று, நெய், தயிர் அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது, நல்வாழ்வு தரும்.

5.வீட்டின் முன்பகுதியில், மஞ்சள் நிற, பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை, அதிகரிக்கும்.

6.வியாழக் கிழமைகளில், ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.

7.அரசமரப் நடுவது, வழிபாடு நன்மை தரும்.

8.யாரையும் ஏமாற்றவோ, பொய் சாட்சி கூறவோ கூடாது.

9.வாழ்வில் ஒரு முறையாவது, ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து, தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ, வேண்டிக் கொள்ள அப்படியே நடக்கும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.