தைப்பூசத் திருவிழா கோலாகலம்! முருகனின் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்!

08 February 2020 கோயில்கள்
muruga1.jpg

இன்று தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும், பக்தர்கள் வெள்ளம் குவிந்துள்ளது. காலை முதலே, முருகனை தரிசிக்க பக்தர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

தை மாதம், பூச நட்சத்திரம், பௌர்ணமி நாளில், தைப்பூசத் திருவிழா உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில், கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

தமிழர்கள் அனைவரும் வணங்கும் தெய்வமாக, முருகப் பெருமான் உள்ளார். இவருடைய அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட கோயில்களில், பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். பால்குடம், காவடி, அழகு குத்துதல் உள்ளிட்ட தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.