திங்கட் கிழமை கந்த ஷஷ்டி திருவிழா ஆரம்பம்! நவ-2ல் சூரசம்ஹாரம்!

24 October 2019 கோவில்கள்
soorasamharam.jpg

வரும் திங்கட் கிழமை அக்டோபர் 28ம் தேதி அன்று, முருகப் பெருமானை வணங்கும் பக்தர்கள் கந்த ஷஷ்டி திருவிழாவினை கொண்டாடுகின்றனர். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க இந்தத் திருவிழாவினை தமிழர்களும், முருகனுடையப் பக்தர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

முருகனின் அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், முருகப்பெருமான் அசுர குல அரசனான சூரபத்மனை அழித்தனை நினைவு கூறும் பொருட்டு, இந்தத் திருவிழா திருச்செந்தூர் கடற்கரையில், மாலையில் நடைபெறும்.

வரும் அக்டோபர் 28ம் தேதி அன்று, கந்த ஷஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகின்றது. திருச்செந்தூர் முருகனுக்கு, பூஜகைள் மற்றும் ஆகம விதிகளின்படி, செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும் செய்த பின், வரும் நவம்பர் 2ம் தேதி அன்று, சூரசம்ஹாரத் திருவிழா நடைபெறுகின்றது. மேலும், நவம்பர் 3ம் தேதி முருகனுக்கு திருமணமும் நடக்கின்றது.