சிவராஜயோகம் பற்றித் தெரியுமா?

24 October 2019 ஜோதிடம்
shivalingam.jpg

பொதுவாக ராஜயோகம் என்றாலே, ஒரு சில யோகங்களே உள்ளன. அவைகளில், பெரும்பாலும், கிரகங்களின் காலம் மற்றும் நேரத்தினைப் பொறுத்தே அமைகின்றன. அப்படி பார்க்கும் பொழுது, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான யோகங்கள் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவைகளில், கெட்ட யோகங்களும் உண்டு. புனிதமான யோகங்களும் உண்டு. அப்படி, புனிதமான யோகங்களில் ஒன்று தான் இந்த சிவராஜயோகம். இந்த சிவராஜ யோகத்தினைப் பற்றி, சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெயரில் இருந்தே, இந்த யோகம் எந்தக் கடவுள் மூலம் ஏற்படுகின்றது என்பதனைப் பற்றி அறியலாம். சூரியனின் அதிபதியான சிவபெருமானே, இந்த யோகத்தினை அள்ளித் தருபவர். அதே போல், இந்த யோகமும், சூரியன் மற்றும், குருவின் சேர்க்கையின் காரணமாக ஏற்படுகிறது.

குரு மற்றும் சூரியன் ஆகியோர், லக்ன மற்றும் கேந்திர, திரிகோணங்களில் இணையும் பொழுது இந்த யோகம் ஏற்படுகிறது. அல்லது, சூரியனுக்கு நேராக ஆறாம் இடத்தில், குரு வக்ரம் பெற்று, அவருடைய ஏழாம் பார்வை, சூரியன் மீதும், அதே போல், வக்ரம் பெற்ற குருவின், பார்வையைப் பெற்ற சூரியன் குருவினைப் பார்ப்பதாலும் ஏற்படுகிறது.

குருவிற்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் பார்வைகள் உள்ளன. அவைகளில், இந்த யோகத்திற்கு ஏழாம் பார்வை மட்டுமே பயன்படும். அதே போல், சூரியனுக்கு ஏழாம் பார்வை மட்டுமே உண்டு.

சிவராஜ யோகத்தால் என்ன பலன்?

இந்த யோகத்தினை உடையவர்கள், பெரும்பாலும் பிரம்மாண்டமான வாழ்க்கையையே வாழ்வர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்களுடைய விடா முயற்சியாலும், இறையருளாலும் நல்ல உயரத்திற்கு சென்று விடுவர். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலும் அமையும்.

ஒரு சிலருடைய் தந்தையால், பிள்ளைக்குப் பயன் இருக்காது. ஆனால், அந்த நபர் தன்னுடைய சொந்தத் திறமையின் மூலம் பிரசித்திப் பெற்ற நபராக மாறிவிடுவார். இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பொழுது, நீங்கள் சிவபெருமானை மனதார வணங்கி வாருங்கள். வாழ்வில், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி ஏற்படும்.

இந்த யோகத்தினை உடையவர்கள் பெரும்பாலும், அதிகாரம் செய்யும் பதவிகளை அடைகின்றனர். ஒரு சிலர் அரசியல்வாதிகளாக வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலர், அரசு அதிகாரிகளாக வெற்றி பெறுகின்றனர். எது எப்படியிருந்தாலும், உங்கள் ஜாதகத்தில் இந்த யோகத்தினை அனுபவிக்க லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.