சிம்மம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
simmam.jpg

இந்த ராசியின் அதிபதி, சூரிய பகவான் ஆவார். இவர்கள், தலைமைப் பொறுப்பிற்கு சொந்தக்காரர்கள். தன்னிடம் உதவி என்று யாராவது வந்துவிட்டால், அவர்களுக்கு இவர்கள் தான் கடவுள். அதே சமயம், யாராவது நம்ப வைத்துக் கழுத்தறுத்தால், அவ்வளவு தான், தான் யார் என்பதை காட்டாமல் விடமாட்டார்கள். ஆனால், மனதில், இவர்கள் ஏமாந்துவிட்டோமே என அழுவர்.

இவர்களுடையப் பலவீனம், என்ன தெரியுமா? ஷாப்பிங் செய்வது தான். இவர்களுடைய மாபெரும் பலவீனம். இவர்கள் சம்பளம் பத்தாயிரமாக, இருக்கும். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் வீட்டிலேயே இருக்கும். ஆனால், கையில் காசு இருக்கிறதே, எதையாவது வாங்குவோம், என ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி அலைவது இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஆனால், இவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? ஒரு கடைக்குப் போனோமா? நறுக்குன்னு வாங்குனோம்மான்னு இருக்கனும்னு வாய் கிழியப் பேசுவாங்க! அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும், வேறு வழியில்லாமல், பரிதாபமாக மூஞ்சியை வைத்துக் கொண்டு, தலையை ஆட்ட வேண்டியது தான்.

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.முக்கியமான நிகழ்ச்சிகள், இண்டர்வியூக்கள், பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன், கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.

2.மனைவியின் சகோதரர்கள், மருமகன்கள், தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன், நல்லுறவவைப் பேணுங்கள்.

3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில், ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.

4.கண் பார்வையற்ற 10 பேருக்கு, ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால், வாழ்வில் வளம் சேரும்.

5. உங்களுடையப் பொருளாதார நிலைக்கேற்ப, ஏதேனும் ஒரு சேவை நிலையம், அன்னதான மன்றத்திற்கு அரிசி, பால் வழங்கலாம்.

6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால், பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது, சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.

7.மது மற்றும் மாமிசம் உண்பதை, அறவே தவிர்ப்பது நல்லது.

8. 7 வகைத் தானியங்களை வாங்கி, ஒரு சிகப்புத் துணியில் முடிந்து, தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்து, மறுநாள் காலையில், அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால், பித்ரு தோஷம் தீரும்.சு ப காரியத் தடைகள் நீங்கும். இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.

9.உண்மையே பேச முயற்சியுங்கள். நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள். அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.