தமிழ் சார்வாரி வருடப் பிறப்பு பொதுப் பலன்கள்!

07 april 2020 ஜோதிடம்
sarvaripanchangam.jpg

வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி அன்று, சித்திரை மாதம் 1ம் தேதி, சார்வாரி வருடம் பிறக்க உள்ளது. இது கலியுகக் கணக்கின் படி, 5061வது வருடகமாகும். இந்த வருடம் கலியுகக் கணக்கின்படி 18,48,572ல் தொடங்கி 18,48,836 நாட்களைக் கொண்டது.

சார்வரி என்பது சமஸ்க்ருத பெயராகும். தமிழில் அதற்கு வீரியெழல் என்றுப் பெயர். இந்த ஆண்டு தமிழ் வருடக் கணக்கின் படி 34 வது வருடம் ஆகும். இந்த ஆண்டினைப் பற்றி, பிரபல சித்தரான இடைக்காடர் தன்னுடைய நூலில் பலன்களைக் கொடுத்து உள்ளார். இந்த ஆண்டு பற்றியும், இந்த ஆண்டில் நடைபெறும் சம்பவங்கள் பற்றியும் நான்கடிப் பாடலில் சுருக்கமாகக் கூறியுள்ளார்.

சாருவாரி ஆண்டதனிற் சாதி பதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள். மாரியில்லை
பூமிவிளைவு இல்லாமல் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு
என்ற பாடலின் மூலம், இந்த ஆண்டினைப் பற்றி சுருக்கமாக விவரித்துள்ளார்.

இந்த ஆண்டினைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இதற்கு முந்தைய ஆண்டான விகாரி வருடத்தின் பலன்களைப் பற்றிக் கூறியிருக்கின்றாரே அது நடந்ததா எனப் பார்ப்போம்.

விகாரி வருடம்
பார விகாரி தனில் பாரண நீரும் குறையும்
மாரியில்லை வேளாண்மை மத்திமாம் சோரர்
பயம் அதிகம் உண்டாம் பழையோர்கள் சம்பாத்திய
உடமையை விற்று உண்பர்.

என விகாரி வருடத்தினைப் பற்றி பாடல் இயற்றியுள்ளார். விகாரி வருடத்தில் நீர் இல்லாமல் குடிநீர் பிரச்சனை எழுந்தது. மழையும் பெரிய அளவில் பெய்யவில்லை. விவசாயமும் மத்திம அளவிலேயே இருந்தது. எதிரிகளால் பயம் ஏற்பட்டது. நம் அரசாங்கம் சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்களான, ஏர் இந்தியா உள்ளிட்ட சொத்துக்களை விற்பனைக்கு வந்துள்ளன. இடைக்காடரின் கணிப்பு நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாகவே பலித்துள்ளது.

இந்நிலையில், சார்வரி வருடத்தில் கூறப்பட்டுள்ள பாடலில், அனைத்து சாதி மற்றும் மதத்தினரும் திடீரென்று தோன்றும் நோயால் அவதிப்படுவர் என்றுள்ளார். அதாவது திடீரென்று, புதிய வைரஸ் உருவாகி, மக்களை ஆட்கொள்ளும் என அர்த்தம். மழை குறையும் வாய்ப்புகள் உள்ளன. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படாது. இதனால், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தமிழ் புத்தாண்டில், பருவ மழையைக் காட்டிலும், புயல் மழையே நமக்குக் கை கொடுக்கும் எனவும் நம்பப்படுகின்றது.