கணவனின் வாழ்க்கை மனைவியின் காலில்! சாமுத்ரிகா லட்சணம்!

24 October 2019 ஜோதிடம்
feet.jpg

சாமுத்ரிகா சாஸ்திரத்தைப் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு அந்த விஷயம் மிகப் பிரபலமானது. அந்த சாஸ்திரத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் அழகை மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையையும் கணித்துவிட முடியும்.

இந்த சாமுத்ரிகா சாஸ்திரத்தில், பெண்களின் கால் பாதங்களை வைத்து, கணவனின் வாழ்க்கையைக் கணிக்கின்றனர். மனைவியின் பாதம் எப்படி இருக்கின்றதோ, அதைப் பொறுத்தே கணவனின் வாழ்க்கை இருக்கும் என்கின்றனர் சாமுத்ரிகா ஆய்வாளர்கள்.

பெண்களுடைய கால்களில் உள்ள விரல்களை, 5 நபர்களாக குறிப்பிடுகின்றனர். அதில் கட்டை விரலை-அங்குஷ்ட்டா என்றும், இரண்டாம் விரலை-பர்ஜானி என்றும், நடுவிரலை-மத்தியமா என்றும், நான்காம் விரலை-அனாமிகா என்றும், கடைசி விரலான சுண்டு விரலை-கனிஷ்ட்டிகா என்றும் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணினுடைய காலிலும், சக்ரா, வாஜா மற்றும் ஸ்வஸ்திகா போன்ற குறியீடுகள் உள்ளன. இவைகளை வைத்தும் கணவரின் தலையெழுத்தைக் கூற இயலும். பெண்ணிணுடைய இரண்டாம் விரல், கட்டை விரலை விடப் பெரிதாக இருந்தால், அந்தப் பெண் யாருக்கும் அடங்காதவள் ஆவாள். குறிப்பாக கணவனுக்கு அடங்கவே மாட்டாள். அவர் எடுப்பது தான் அந்தக் குடும்பத்தில் எடுக்கும் முடிவுகளில் முக்கியமானதாகக் கருத்தப்படும்.

கால்களில் உள்ள விரல்கள், மொந்தென்று பெரிதாக இருந்தால், குடும்பப் பிரச்சனைகளைத் தாங்கி, கணவரின் வளர்ச்சிக்கும், அவருடைய வெற்றிக்கும் துணையாக நிற்பாள். நல்ல குணவதியாகவும் இருப்பார். நான்காம் விரலும், சுண்டு விரலும் தரையில் படாமல் நடக்கும் பெண்களுக்கு கணவன் மீது நம்பிக்கை இருக்காது. வேறு வழியில்லாமல் அவருடன் இணைந்து வாழ்வர். நான்காம் விரலும், சுண்டு விரலும் சம அளவில் இருந்தால், கணவன் செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும். பெண்களுடைய பாதம் வட்ட வடிவில் அமைந்து சிவந்த நிறத்தில் இருந்தால், அப்பெண் அதிர்ஷ்டசாலி. கணவனுக்கு பெரும் செல்வம் சேரும்.

விரல்களுக்கு இடையே, இடைவெளி அதிகமாக இருந்தால், அந்தப் பெண் பண விஷயத்தில் எச்சரிக்கை இல்லாதவராய் இருப்பாள். அதிகப் பணத்தை விரயம் செய்வாள். இவ்வாறு பெண்களின் கால் பாதத்தை வைத்து, கணவனின் வாழ்க்கையை முன்னோர்கள் கூறியுள்ளனர்.