சாமுத்ரிகா சாஸ்த்திரம்!

24 October 2019 ஜோதிடம்
samu.jpg

முன்பெல்லாம் மணப்பெண்/மணமகன் பார்க்கும் பொழுது தான் சாமுத்ரிகா லட்சணம் பார்ப்பார்கள். ஆனால் தற்பொழுது உடைகளில் கூட சாமுத்ரிகா லட்சணம் பார்க்கின்றனர். இதில் மணமகனுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்றாலும், மணமகளிடம் அதிகமாகப் பார்க்கின்றனர். ஆனால், உண்மையில் மணமகனுக்கும் சாமுத்ரிகா லட்சணம் உண்டு.


இது ஒரு வித அறிவியல் அறிவு என்று கூடக் கூறலாம். ஒருவருடைய உடல் அமைப்பை வைத்து, அவருடைய வாழ்க்கையையும், அவருடைய பழக்க வழக்கங்களையும் அறிய இந்த சாமுத்திரிகா லட்சணம் பார்க்கப்படுகிறது. இதனை வைத்து ஆணின் அழகையோ அல்லது ஒரு பெண்ணின் அழகையோ எளிதாக அறிந்திடலாம். இதனை உலகில் உள்ள ஒவ்வொரு ஓவியரும், சிற்பக் கலைஞரும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பின்பற்றி வருகின்றனர். இதனைப் பின்பற்றியே அழகான படைப்புகளை இவ்வுலகிற்கு அளிக்கின்றனர்.


இதில் ஆண்களையும், பெண்களையும் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
ஆண்
pen.jpg

ஆண்களை முயல், மான், காளை மற்றும் குதிரை என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.


பெண்

பெண்களைப் பொதுவாக சித்தினி, சங்கினி, அத்தினி மற்றும் பத்மினி என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.


பத்மினி
lakshanam1.jpg

இப்பிரிவைச் சேர்ந்தப் பெண்கள் கற்பு நெறித் தவறாமல் கணவனை காதலிக்கும் தன்மை உடையவர்கள். தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். பஞ்சு போன்ற மென்மையானத் தேகத்தையும், கொடி இடையையும், அளவான பின்னழகையும் பெற்றிருப்பர்.


சித்தினி
face.jpg

அளவில்லா அழகுடன், பார்ப்பவர் மனதைக் கிரங்க வைக்கும் நிறத்துடன் இருப்பர். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பளபளப்பான தேகமும், இறுக்கமான பெரிய மார்பகங்களும் கொண்டிருப்பர். சற்று பெருத்த பின்னழகுடன் காட்சியளிப்பர். இவர்கள் சுமாரான உயரமும் மென்மையான தேகத்தையும் கொண்டிருப்பர்.


சங்கினி
sangini.jpg

இவர்கள் பேரழகிகளாகவும், சற்று உயரமாகவும் இருப்பர். அளவான முன்னழகு மற்றும் பின்னழகை உடைய இவர்கள் உடலில் ரோமங்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் தன் அழகின் மீது கர்வம் கொண்டிருப்பர். சாதாரணமாகவே இவர்கள் உடல் சூடான நிலையிலேயே இருக்கும்.


அத்தினி
1athini.jpg

இவர்கள் உடலில் எப்பொழுதும் வியர்வை நாற்றம் இருந்து கொண்டே இருக்கும். குறைந்த அழகுடன் காணப்படுவர். தடித்த உதடுகளுடன் அதிக ரோமம் உள்ள உடலுக்குச் சொந்தக்காரர்கள். கட்டைக்குரலும், திமிரும் அதிகளவில் காணப்படும். கள்ளக் காதலை அதிகம் விரும்பும் தன்மை உடையவர்கள்.