ரிஷபம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
rishabam.jpg

ரிஷபத்தின் அதிபதி, சுக்கிரன் ஆவார். இவர்கள் இளமையின் அதிபதி அல்லது இளமை விரும்பிகள் என்றுக் கூடக் கூறலாம். இவர்கள் வயதை கணிப்பது, சற்றுக் கஷ்டமான விஷயம் தான். இவர்கள் எந்த ஒரு பழக்கத்திற்கும், அவ்வளவு எளிதில் அடிமையாகமாட்டார்கள். இவர்கள் மிகவும் பொறுப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள் அதே சமயம், மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள். இந்த ராசிக்காரர்களின் பலவீனம் என்ன தெரியுமா?

இந்த ரிஷப ராசிக்காரர்கள் சாப்பாட்டு ராமன்கள். பசியைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். சாதாரண மனிதர்கள் மூன்று வேளை உணவு உண்டால், இவர்கள் மூன்று வேளையை விட அதிகமாகவே உணவு உண்பர். இவர்களுடையப் பொழுது போக்கே, எந்த கடையில், எந்த உணவு நன்றாக இருக்கும் என, ஆராய்ச்சி செய்து உண்பது தான். அந்த அளவிற்கு சாப்பாட்டு விரும்பிகள்.

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியங்கள (சென்ட்) தடவிக் கொள்வது, உங்களுடைய அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

2.சிலருக்கு, அதீத காம சிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம். அப்படி அதிக காம ஆசை உள்ளவர்கள், ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால், பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். எனவே, வேறு எந்தப் பெண்ணுடனும், தவறான சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டாம்.

4.மனைவியை வீட்டு முற்றத்தில், எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம். இது தம்பதிகளுக்கு இடையே உள்ள, தோஷ நிவாரணமாகவும், மிக நெருக்கமாக வாழவும் உதவும்.

5.பொருளாதார வசதி இருந்தால், ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.

6.பட்டு, நைலான், பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் மிகவும் அதிர்ஷ்டமானவை. இந்த ஆடைகளை பயன்படுத்தும் பொழுது, அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

7.ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு, ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம், கஷ்டம் முதலியவைகள் தரும்.

8.உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப, மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம், உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால், இல்லை என்று சொல்லாமல், ஒரு ரூபாயாவது போடுங்கள். இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும். மேலும், உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.