விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
viruchagam.jpg

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட, விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு பலவிதமான மாற்றங்கள் நடக்க உள்ளன. உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு கேது பகவானும், எட்டாம் இடத்திற்கு ராகு பகவானும் பெயர்ச்சி அடைகின்றனர்.

இதுவரை ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான் இந்த ராகு கேது பெயர்ச்சிக்குப் பின், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக, அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். ராகு எட்டாம் இடத்தில் இருப்பதால், வாகனங்களில் செல்லும் பொழுது, கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

உடலில் காயங்கள் ஏற்படலாம். எனவே, முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர், எதையும் செய்யுங்கள். உடலின் மர்ம உறுப்புகளில் நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

லஞ்சம் வாங்குதல், வரி ஏய்ப்பு போன்றவைகளில் ஈடுபட வேண்டாம்.

அவ்வாறு ஈடுபட்டால், கண்டிப்பாக அரசாங்க தண்டனைக்கு ஆளாக நேரிடும். ராகுவின் பார்வையால் உங்கள் தொழிலுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது. இருப்பினும், பணப்புழக்கம் சற்று சுமாராகவே இருக்கவும். இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் செய்யும் தொழிலை தொடர்ந்து செய்து வாருங்கள்.

பணம் வாங்குதல் மற்றும் பணம் கொடுத்தலில் சற்றுக் கவனமுடன் இருக்கவும். இல்லையென்றால், ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ராகுவின் பார்வையால், எதிரிகளின் பொருட்கள் திடீரென்று உங்களுக்குக் கிடைக்கும். எதிரிகளை வென்றுவிடுவீர்கள்.

rahuketu.jpg

குடும்பத்தில் உள்ள அமைதியை இந்த ராகு-கேதுப் பெயர்ச்சிக்குப் பின் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களையும், வீண்விவாதங்களையும் தவிர்க்கவும். உங்கள் கணவன் அல்லது மனைவி கூறுவதைக் காது கொடுத்துக் கேளுங்கள். இல்லையென்றால், பிரச்சனைதான். இந்த ராகுப் பெயர்ச்சியில், உங்கள் துணையின் பேச்சை கேட்டு நடக்கவும்.

திருமணம் செய்ய நினைப்பவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபருக்குப் பின் செய்யவும். இல்லையென்றால், பிள்ளைப் பேறு சற்றுத் தள்ளிப் போகும். பணப் பிரச்சனைகள் அதிகரிக்கும். இருப்பினும், முதல் இரண்டு மாதங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. போன வருடத்தைக் காட்டிலும், வருவாய் குறைந்த அளவிலேயே இருக்கும். படிப்பில் மந்த நிலைக் காணப்படும். குடும்பத்தில் நிம்மதி குறைந்து காணப்படுவது போல் இருக்கும்.

மந்திரவாதிகளால் ஒரு சிலருக்குப் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் குல தெய்வத்தை வணங்கி வரவும். பணத்தினால் வீட்டில் பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கேதுவுடன், சனி பகவானும் இருக்கின்றார். இதனால், கேதுவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும், குருவின் பார்வையால், 2019 அக்டோபர் குருப்பெயர்ச்சிக்குப் பின் உங்களுடைய தற்பொழுது உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குரு உங்கள் ராசியில் தற்பொழுது இருப்பதால், சற்று கவலையுடனேயே காணப்படுவீர்கள். அக்டோபருக்குப் பின், இந்த நிலை மாறும். ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

கேதுவின் பார்வையால், தாயாரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சீராகும். அவரால் ஏற்பட்டு வந்தப் பிரச்சனைகள் தீரும். நிம்மதியான தூக்கத்திற்குப் பிரச்சனை இருக்காது.

உங்கள் விருச்சிக ராசிக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால், நூற்றுக்கு 76% நன்மைகளே நடக்க உள்ளன.

எதையும் தொடங்குவதற்கு முன் விநாயகரை வணங்கவும்.

பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஆஞ்சநேயரை வணங்கி வரவும்.