துலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
thulam.jpg

சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட, துலாம் ராசி அன்பர்களே! இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால் உங்கள் துலாம் ராசிக்குப் பலவித நன்மைகள் நடக்க உள்ளன.

சுக்கிர பகவானுக்கு ராகு மற்றும் கேது ஆகியவை நண்பர்கள். ஆதலால், கஷ்டமான சூழ்நிலைகளிலும் எப்படியாவது உங்களுக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உதவ முயற்சிப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த ராகு-கேது பெயர்ச்சியினால், ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் பெயர்ச்சி அடைகிறார்.

சென்ற ராகு-கேதுப் பெயர்ச்சியை விட இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி நன்றாகவே உள்ளது.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால் முன்னோர்களின் தோஷம் ஏற்படுகின்றது. இதனால், நீங்கள் செய்யும் காரியங்களில் பெரிய தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின், நீங்கள் பெரிய சொத்துக்களை வாங்கும் முன் உங்கள் சுய ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ளவும். இல்லையென்றால், பெரிய நஷ்டம் அல்லது இழப்பினை சந்திக்க வேண்டி வரலாம். எனவே, சொத்துக்களை உங்கள் பெயரில் வாங்காமல், உங்கள் வீட்டில் இருப்பவர்களின் பெயரில் வாங்குவது நல்லது.

தந்தையின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. மேலும், முன்னோர்களின் தோஷத்தை ராகு பகவான் உருவாக்குவதால், நீங்கள் உங்கள் தந்தையின் உடல்நலத்தை கவனமுடன் பார்க்க வேண்டியது கடமையாகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்குப் படிப்பில் தடை, சோம்பேறித்தனம் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே, சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் படிப்பது அவசியம். எதைப் பற்றியும் தேவையற்ற அதிக யோசனைகளை மேற்கொள்ள வேண்டாம். மனதினை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்ச்சி செய்யவும். செய்யும் வேலைகளில் தடைகள், பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தக் காலக் கட்டத்தில் புதிய தொழில் தொடங்க சற்றுத் தாமதம் ஆகலாம்.

rahuketu

எனவே, உங்கள் ஜாதகப்படி ஒரு நல்ல நாள் பார்த்து தொடங்கவும். வேலையிட மாற்றம் போன்றவைகளை சற்றுத் தள்ளி வைக்கவும். தொழில் செய்யும் இடங்களில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.

கேது 3ம் இடத்தில் நல்லது என்றாலும், சனியுடன் சேர்ந்து இருக்கின்றார். இதனால், செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படும். முயற்சிகளில் பின்னடைவுகள் உண்டாகும். உண்மையைக் கூற வேண்டும் என்றால், ராகுவை விட கேது சற்று குறைவானப் பாதிப்புகளையே இந்த முறை உங்களுக்கு வழங்க உள்ளார். சென்ற ராகு-கேதுப் பெயர்ச்சியை விட இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி நன்றாகவே உள்ளது.

காதல் போன்ற விவகாரங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவியுடன் அதிக அன்புடன் இருப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் இந்தக் கேதுப் பெயர்ச்சியினால், பலப் பிரச்சனைகள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்களுடைய ஆசைகளை கேது பகவான் 2019ம் ஆண்டின் பின் பகுதியில் நிறைவேற்றி வைப்பார். படிப்பில் மந்த நிலை காணப்படும்.

2019ம் ஆண்டு அக்டோபரில் நடக்கும் குருப்பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். இதன் காரணமாக, ராகுவால் ஏற்படும் பாதிப்புகள் குறைய ஆரம்பிக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். யாருக்காகவும் ஜாமீன் தர வேண்டாம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவும். அண்டை, அயலாருடன் நட்புறவை பேணவும்.

உங்கள் துலாம் ராசிக்கு நூற்றுக்கு 67% நன்மைகளே நடக்க உள்ளது.

ராமேஸ்வரம் சென்று, தீர்த்தத்தில் நீராடவும்.

ராகு காலத்தில் துர்க்கையை வழிபடவும்.

குல தெய்வத்தைத் தொடர்ந்து வணங்கி வர, உங்கள் முன்னோர்களால் ஏற்பட்ட சாபமும், வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடைகளும் மறைந்து நிம்மதி பிறக்கும்.