0

தனுசு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
thanusu.jpg

குருவின் ஆதிக்கத்தில் பிறந்த, தனுசு ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சியின் காரணமாக, உங்கள் ராசிக்குப் பல மாற்றங்கள் நடக்க உள்ளன.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், முதலில் களத்திர தோஷம் உண்டாகிறது. எனவே, திருமணத்தை வரும் 2019 அக்டோபர் வரை தள்ளிப் போடவும். அல்லது உங்கள் சுய ஜாதகத்தை சரி பார்த்து நல்ல நாளில் செய்யவும். தொழிலில் கவனம் தேவை. செய்யும் செயல்களில் சற்றுக் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியம்.

உங்கள் கணவன் அல்லது மனைவியின் உடல்நிலை பாதிக்கும். அவர் மீதான காதலும், அன்பும் இந்த ராகு-கேது பெயர்ச்சியின் காரணமாக சற்று அதிகரிக்க ஆரம்பிக்கும். பண வரவு சுமாராகவே இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்றுக் கவனமுடன் செய்யவும். இல்லையென்றால், உங்கள் கூட்டாளிகள் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

செய்யும் செயல்களில் சற்றுக் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியம்.

எனவே, தொழிலில் அதிக கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது, சற்றுக் கவனமுடன் இருக்கவும். இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.

உங்கள் துணையின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான ஆசையும், அன்பும் அதிகரித்து கொண்டே இருக்கும். இருப்பினும், அவர்கள் மூலம் உங்களுக்கு தொல்லைகளும் உண்டாகும். ராகுவின் பார்வையால், மறைமுக வழிகளில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. 2019ம் ஆண்டு அக்டோபருக்குப் பின் உங்கள் குழந்தைகள் ஈடுபடும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவர்.

rahuketu

குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, 2019ம் ஆண்டு அக்டோபருக்குப் பின் நல்ல குழந்தைகள் பிறக்கும். உங்களுடைய மறைமுக ஆசைகளும், தேவைகளும் பூர்த்தி ஆகும். இந்த முறை ராகு பகவான் சென்ற ஆண்டை விட சற்று நன்றாகவே இருக்கின்றார். இதனால், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நன்றாகவே இருக்க உள்ளது.

கேது பகவான் உங்கள் ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், உடல்நலத்தில் அக்கறைத் தேவை. தேவையற்ற கஷ்டங்களை அவர் அளிப்பார். ஆனால், குருவின் பார்வை பலம் வரும் 2019ம் ஆண்டு அக்டோபர் வரை இருப்பதால், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. உங்கள் முகம் பொலிவு பெரும். பணப் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாமல் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம். சங்கடங்களைத் தரும் விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உடம்பில் தொற்று நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், கேது பகவான் சனீஸ்வரருடன் இணைந்து காணப்படுகிறார். இதனால், பிரச்சனைகளின் வீரியம் அதிகரிக்கும். மேலும், ஒரு உண்மையைக் கூற வேண்டும் என்றால், திடீர் யோகங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. காரணம் சனியுடன் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டங்களும், பணம் சம்பந்தப்பட்ட வாய்ப்புகளும் தேடி வரும்.

இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் நல்ல வளர்ச்சி உண்டாகும். இருப்பினும், அவர்களுடன் உரையாடும் பொழுது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்ம். அக்டோபர் 2019க்குப் பின் உங்கள் கணவன் அல்லது மனைவியின் உடல்நிலை சீராகும். அவர்கள் மூலம் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். ராகுவை விட கேது சற்று நல்ல பலன்களை அளிப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியின் காரணமாக, தனுசு ராசிக்கு நூற்றுக்கு 72% நன்மைகளே நடக்கும்.

பிரச்சனைகள் வராமல் இருக்க, காளஹஸ்தீ சென்று வரவும்.

விநாயகரை வணங்குவது அவசியமான ஒன்றாகும்.