சிம்மம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
simmam.jpg

சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட, சிம்ம ராசி அன்பர்களே! இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ராசிக்குப் பல வித நன்மைகள் நடக்க உள்ளன. ராகு பகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

தொழிலில் இதுவரை இருந்து வந்தத் தடைகள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். மூத்த சகோதரர்களால் பிரச்சனைகள் வரலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயர ஆரம்பிக்கும். சகோதர சகோதரிகளிடம் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நல்லது.

இந்தக் கால கட்டத்தில் நீங்கள் புதிய தொழில்களை ஆரம்பித்துக் கொள்ளலாம். எவ்விதத் தடையும் உங்களிடம் ராகு பகவான் விடமாட்டார்.

ராகுவின் பார்வையால் உங்களுடையத் தேவைகளையும், ஆசையையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய நீண்ட கனவு நினைவாகும். புதிய வாகனங்கள் ஒரு சிலருக்கு அமையும். அக்டோபர் மாதம் நடைபெறுகின்ற குருபெயர்ச்சிக்குப் பின் அனைத்தும் நன்மையாக மாறும்.

ராகுவின் பார்வையால் உங்கள் தந்தையின் மூலம் சிறுசிறுப் பிரச்சனைகள் ஏற்படலாம். அவரின் மூலம் அதிர்ஷ்டங்கள் அமைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ராகுவின் பார்வையால் குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அக்டோபருக்குப் பின் நல்ல குழந்தைகள் பிறக்கும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக, உங்களிம் உள்ளப் புத்திக் கூர்மை குறைவாகவே வெளிப்படும். மேலும், உங்கள் குழந்தைகள் மூலம் பலக் கவலைகள் உண்டாக அதிக வாய்ப்புகள் உண்டு. சனியும் ஐந்தாம் இடத்தில் இருப்பதால், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நினைத்துக் கவலைப்படுவீர்கள்.

குழந்தைகளால் பிரச்சனைகள் வரலாம். இருப்பினும், வரும் அக்டோபருக்குப் பின் அவர்கள் மீதான கவலைக் குறையும். கேதுவின் பார்வையின் காரணமாக, உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் விரிசல்கள் ஏற்படலாம். இருப்பினும், பெரிய அளவிலான பிரச்சனைகள் இருக்காது. உங்கள் துணையுடன் இணைந்து ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். தைரியம் அதிகரிக்கும், இளைய சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

rahuketu

ராகுவால் அதிக அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இருப்பினும், அவைகளைத் தடுக்க கேது முயல்வார். குருவின் பார்வை பலனால், ராகு செய்ய வேண்டிய அனைத்து நன்மைகளையும் செய்து முடிப்பார். இந்த ஒன்றரை வருடத்தில் உங்கள் குழந்தைகளால் பெரிய அளவிலான லாபமோ, பெயரோ அல்லது புகழோ ஏற்படாது.

ராகு கொடுக்க நினைக்கின்ற குழந்தைப் பாக்கியத்தை கேது பகவான் தடுப்பார். உண்மையைக் கூற வேண்டும் என்றால், இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் கேது பகவான் உங்கள் ராசிக்குப் பெரிய அளவில் நன்மையை அளிக்கமாட்டார். சனியுடன் இணைந்து இருப்பதால், மேலும் பிரச்சனைகளைப் பெரிதாக்க முயல்வார். கவலை வேண்டாம்.

திருமணத்திற்கு எவ்விதத் தடையும் இல்லை. சுப நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிம்மதியான உறக்கம் உண்டு. சென்ற ராகு-கேதுப் பெயர்ச்சியைக் காட்டிலும் இந்த பெயர்ச்சி சற்று நல்ல விதமாகவே உள்ளது. மேலும், புதிய வீடுகள், வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த ராகு-பெயர்ச்சியினால், சிம்ம ராசிக்கு நூற்றுக்கு 78% நன்மைகளே நடக்கும்.

பல நன்மைகள் நடக்க விநாயகரை வணங்கி வரவும்.

வெங்கடாசலபதியை வணங்கி வர நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்.