ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
rishabam.jpg

சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட, ரிஷப ராசி அன்பர்களே! இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியானது உங்கள் ராசிக்குப் பல மாறுதல்களை, அளிக்க உள்ளது.

இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். வெளி ஆட்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களையும், வீண் விவாதங்களையும் தவிர்க்கவும். பெண்கள் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. எனவே, பெண்கள் விஷயத்தில் சற்று எச்சரிக்கைத் தேவை. தேவையற்ற அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் மற்றும் வாங்கலில் கவனம் தேவை.

தாயின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, தாயிடம் கூட அளவாகப் பேசவும். இல்லையென்றால், நீங்கள் என்ன பேசினாலும், அதுப் பிரச்சனையில் சென்று முடிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ராகுவின் பார்வையால், தூக்கத்தில் உளறல், தூங்குவதில் பிரச்சனை அல்லது தூங்கும் பொழுது பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

அக்டோபர் மாதம் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், இந்தப் பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

குருவின் பார்வையால் பல நன்மைகளை அடைவீர்கள். இருப்பினும், வெளியில் சென்று உணவருந்த வேண்டாம். அது விஷமாக அல்லது வேறு உடல் உபாதைகளை உண்டாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முகம் சற்றுப் பொலிவுடன் காணப்படும். உங்கள் ராசி நாதனான சுக்கிரன், இந்த ராகு கேதுப் பெயர்ச்சியின் பொழுது உங்களுக்குத் துணையாக இருக்க உள்ளார். இதனால், உங்களைப் பெரிய சங்கடங்கள் எதுவும் நெருங்காது. உடலில் வாயுத் தொல்லைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

வீட்டில் உள்ளப் பெண்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். இல்லையென்றால், அவர்கள் உங்களுடைய மனதைப் புண்படுத்திவிடுவர். சுருக்கமாகச் சொன்னால், இந்த ராகு-கேது பெயர்ச்சியில், ராகு பகவான் உங்கள் வாயின் மூலம் பிரச்சனைகளை உருவாக்க உள்ளார். இதனால், சற்றுக் கவனமுடன் இருக்கவும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்குச் செல்கிறார். ஜோதிடர்களால் எட்டாம் இடம் மறைவு ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. இவருடைய இந்த சஞ்சாரத்தால், உங்கள் கணவன் அல்லது மனைவியிடையே தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாமல் உங்கள் கணவனையோ அல்லது மனைவியையோ விமர்சிப்பதைத் தவிர்க்கவும். பிறருடன் உங்கள் துணையை ஒப்பிட வேண்டாம். மேலும், எட்டாம் இடத்தில் சனி இருக்கிறார்.

rahuketu

குழந்தைப் பிறப்பிற்கு சற்றுத் தாமதம் ஆகும். முதல் மூன்று மாதங்கள் உங்கள் உடலில் சக்தியே இல்லாதது போன்று உணர்வீர்கள். திடீரென்று நோய் தொற்று போன்றவைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, உடல்நலனில் அக்கறைத் தேவை. லஞ்சம் வாங்குதல், பதுக்குதல் போன்ற செயல்களை செய்ய வேண்டாம். அது அரசாங்கப் பிரச்சனைகளை உங்களுக்குத் தரும். தொழிலில் பிரச்சனை இருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகும். 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சிக்குப் பின் இந்த நிலை சீராகும்.

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வரும் குரு பகவான் கேது, சனியுடன் இணைகின்றார். இதனால், ராகு மற்றும் கேதுவால் ஏற்படும் தீய பலன்கள் குறையும். இருப்பினும், குழந்தைப் பிறப்பை சற்றுத் தள்ளிப் போடவும்.

குருவின் பார்வையால் தந்தையுடன் இருந்து வரும் பிரச்சனைகள் அக்டோபர் 2019க்கு பின் தீரும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தாயுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி, வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும்.

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நூற்றுக்கு 68% நன்மைகளையே வழங்க உள்ளது.

மற்றக் கிரகங்கள் நல்ல நிலைமையில் இருக்கின்றன. எனவே, கவலை வேண்டாம்.

மேலும், பல நன்மைகள் நடக்க, சிவபெருமானை வணங்கி வரவும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றவும்.