மேஷம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
mesham.jpg

செவ்வாயை அதிபதியாக கொண்ட, மேஷ ராசி அன்பர்களே! இந்த ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த ராகு-கேது பெயர்ச்சியின் பொழுது, உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆட்சியில் இருக்கிறார். இது ஒரு சுப அமைப்பாகும். இதனால், இந்த ராகு-கேது பெயர்ச்சியினால் பெரிய அளவிலான பாதிப்புகளை முதல் இரண்டு மாதத்திற்குத் தர மாட்டார்.

ராகு மூன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைவதன் காரணமாக, வெளியுலகத் தொடர்ப்புகள் நன்றாக இருக்கும். மேலும், ராகு பகவான் காற்று ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் பிரச்சனைகளும், வீண் பேச்சுக்களும் வரலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நினைத்த வெற்றியை அடைவீர்கள்.

தொழிலில் இருந்து வந்தத் தடைகள் அனைத்தும் ராகுவின் இந்த சஞ்சாரத்தால் விலகிவிடும்.

வருடத்தின் அக்டோபர் மாதக் கடைசியில் நடக்கும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து தன்னுடைய ஏழாம் பார்வையை ராகுவின் மீது பதிக்கிறார். 2019 பிப்ரவரி முதல் இருந்து வரும் சகோதரப் பிரச்சனைகள் அனைத்தும் அந்தக் குருப்பெயர்ச்சிக்குப் பின் படிப்படியாக சீராகும். மேலும், தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உடல்நலத்தில் அக்கறைத் தேவை.

ராகு தன்னுடைய மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டைப் பார்க்கின்றார். இதனால், அழகிய ஆண் குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், சிறிது தாமதம் ஆகலாம். தன்னுடையப் பதினோறாம் பார்வையாக உங்கள் ராசியையேப் பார்க்கின்றார். இந்தச் சிறப்பு உங்கள் ராசிக்கு மட்டுமே இந்த ஆண்டு உள்ளது.

இதன் பலனால், உங்களுடைய ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் மறைத்து வைத்துள்ள சில விஷயங்களையும், இரகசிய ஆசைகளையும் நிறைவேற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்.

rahuketu

மேலும், உங்களுடைய மனதில் ஒரு சிலக் குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உங்கள் தந்தை, உங்களுடன் விரோதப் போக்கைக் கடைபிடிப்பார். ஆகவே, நீங்கள் தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், குரு பகவான் கேது, சனியுடன் ஒன்பதாம் வீட்டில் இணைகின்றார்.

இதனால், உங்களுடையத் தொழில் சிறப்படையும். வெளியுலகத் தொடர்பு விருத்தி அடையும். நெருப்பினால், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இரும்பு சம்பந்தப்பட்டத் தொழில் செய்பவர்கள் சற்றுக் கவனமுடன் இருக்கவும். வாகனங்களில் செல்லும் முன், அதனை சரியாகப் பரிசோதிக்கவும்.

அக்டோபருக்குப் பின் உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைப்பதில் தடை இருக்காது. அழகிய, ஆரோக்கியமான குழந்தைப் பிறக்கும். உங்களுடைய உடல் நிலை சீராகும். மனம் புத்துணர்ச்சிப் பெரும்.

ஆக மொத்தம் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியானது, உங்கள் மேஷ ராசிக்கு நூற்றுக்கு 78% நன்மைகளையே வழங்க உள்ளது.

கேதுவினால் ஏற்படும் பிரச்சனைகள் தீர, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றவும்.

குல தெய்வத்தை வணங்கி வரவும். காகத்திற்கு எள் சாதம் படைக்கவும்.

உங்களுடைய முன்னோர்களை வணங்கி அவர்களுடைய கோபத்தை சாந்தமடையச் செய்யவும்.