மீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
meenam.jpg

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட, மீன ராசி அன்பர்களே! இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில் ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், முதல் ஒன்பது மாதங்கள் அதாவது அக்டோபர் வரை, சில தடுமாற்றங்களையும், தடைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். தாயின் உடல் நலத்தில் அக்கறைத் தேவை. அவரைப் பற்றியக் கவலைகள் ஏற்படலாம். உங்களுடைய சுகமான வாழ்க்கையில் சில இடையூறுகள் மற்றும் தடைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஒரு சிலருடையக் கனவுகளில் பாம்பு போன்ற உயிரினங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒரு சிலர் நேரில் பாம்பினைக் காணும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பிப்ரவரி முதல் அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சி வரை வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை. இல்லையென்றால், விபத்துக்களில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உறவினர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் உறவினர்கள் உங்களுடன் பகைமை உருவாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை

ராகுவின் பார்வையால், உங்கள் மனைவி அல்லது கணவனின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டில் நிம்மதி அற்ற நிலை காணப்படலாம். அதனால், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள். உங்கள் குடும்பத்தை விடப் பெரியது ஒன்றும் இல்லை. மனதில் அக்டோபர் வரை நிம்மதி இருக்காது. நீங்கள் செய்யும் தொழிலில் எவ்விதத் தடையும் ஏற்படாது. வருமானத்திற்கும் எவ்விதக் குறையும் இருக்காது.

இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நல்லது. மேலும், வாகனங்களில் செல்லும், பொழுது ஒரு முறைக்கு இருமுறை வாகனங்களை சோதனை செய்த பின் பயன்படுத்தவும். மார்பில் சுளுக்கு அல்லது பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். மேலும், குருவின் பார்வையால் ராகுவால் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் தீரும். குருவின் பார்வையால், உங்கள் தாயின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். மனைவி அல்லது கணவனுடன் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலிலும் நல்ல வருமானம் வர ஆரம்பிக்கும். உறவினர்களுடன் இருந்த வந்த மோதல்கள் முடிவுக்கு வரும்.

தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். வீட்டில் இருந்து வந்த ஒரு வித அர்த்தமற்ற பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் முடிவுக்கு வரும். வாகனங்களால் ஏற்பட்ட கண்டங்கள் முடிவுக்கு வரும். இருப்பினும், அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு 75% வரை மட்டுமே முடிவுக்கு வரும். இவை அனைத்தும் தீர நீங்கள் மாதம் ஒரு முறையாவது ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட அவர்களது அருளால் பிரச்சனைகளின் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாமல் இருக்கும்.

உங்கள் ராசிக்கு கேது பகவான் இந்த ராகு கேது பெயர்சியில் பத்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு சனி பகவானுடன் இணைகின்றார். கேதுவின் இந்த பெயர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ உள்ளன. பத்தாம் இடத்தில் சனீஸ்வரனும், கேது பகவானும் இருப்பதால், நீங்கள் கடுமையாக உழைக்க ஆரம்பித்து இருப்பீர்கள். இந்த ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பின், கேது பகவானின் இந்த மாற்றத்தால், வருமானம் வர ஆரம்பிக்கும்.

rahuketu

எதிரிகளைக் கூட நண்பர்களாக்கிவிடுவீர்கள். மனதில் ஒரு வித அமைதி தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும். தொழில் குறித்தக் கவலை உங்களுக்கு இருக்காது. உங்கள் தந்தையின் தொழிலில் ஒரு சிலப் பிரச்சனைகள் வரலாம். அவர் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

தேவையில்லாமல், உங்கள் தந்தை யாருக்காகவும் ஜாமீன் உட்பட்ட பல விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் தந்தை இந்த காலக்கட்டத்தில் சில கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இருப்பினும், இது தற்காலிகமானது தான். சனீஸ்வரன் பத்தில் இருப்பதால், தொழிலில் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்.

வரும் அக்டோபர் மாதம் நடக்கும் குருப் பெயர்ச்சியின் காரணமாக குரு பகவானும் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், தொழில் மற்றும் குடும்ப விஷயங்களில் நிம்மதி கிடைக்கும்.

பெரிய அளவிலான முயற்சிகள் இல்லாமலே அனைத்தும் நல்ல விதமாக நடக்கும். தொழிலில் இருந்து வந்த தாமதம் மற்றும் வருமானத்தில் இருந்து வந்த தாமதமும் நீங்கி வேகமாக தொழில் நகர ஆரம்பிக்கும்.

மற்ற கிரகங்களும் நன்றாக இருக்க உள்ளதால், உங்கள் மீன ராசிக்கு இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில் நூற்றுக்கு 84% நன்மைகளே நடக்கும்.

மேலும், பல நன்மைகள் நடக்க ஸ்ரீவிநாயகரை வணங்கி வரவும்.