மகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
makaram.jpg

சனீஸ்வரனை அதிபதியாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ராசிக்கு பல மாற்றங்கள் நடக்க உள்ளன.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். உண்மையில் இது ஒரு சுப அமைப்பாகும். இதன் காரணமாக, எதிரிகளை தந்திரமாக வென்றுவிடுவீர்கள். உங்கள் எதிரிகளின் பொருட்கள், உங்களுக்கு வந்து சேரும். இது ஒரு மறைவுஸ்தானம் என்றாலும், இந்த இடத்தில் ராகு பகவான் இருப்பது மாபெரும் யோகத்தை அருளக் கூடியது.

உங்கள் எதிரிகள் உங்களைக் கண்டால் நடுங்கும் நிலை ஏற்படும். தேவையற்றப் பிரச்சனைகளுக்கு நீங்களாக செல்ல வேண்டாம். கையில் பண வரவு தாராளமாக இருக்கும். இருப்பினும், இந்தப் பண வரவின் காரணமாக, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட வேண்டாம்.

ராகு போதையிலேயே உங்களை மூழ்கடித்துவிடுவார்.

ஆறில் இருக்கும் ராகுவின் பார்வையால், உங்கள் தந்தையின் உறவினர்கள் குறிப்பாக பெண் உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். அதே சமயம், சில அன்புத் தொல்லைகளும் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில், நீங்கள் தலையிட வேண்டாம். அடுத்தவருடைய குடும்ப விஷயத்தில் நீங்களும், உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களையும் தலையிட அனுமதிக்க வேண்டாம்.

தொழிலைப் பொறுத்த வரை முன்னேற்றத்திற்குக் குறையிருக்காது. வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அத்தியாவசியச் செலவுகளைத் தவிர்த்துப் பிற செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஏற்படுகின்ற செலவுகளைச் சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்ளவும். லகுவாக உழைத்து எளிதாக பணம் சம்பாதிக்கும் வழிகளை ராகு பகவான் உங்களுக்குக் காட்டுவார்.

வயிற்று வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ராகு பகவானால் வருவதற்கு வர வாய்ப்புகள் உண்டு. எனவே, சற்றுக் கவனமாக இருக்க வேண்டும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது ஒரு மோட்ச அமைப்பாகும். மேலும், சனி பகவான் தொடர்ந்து பன்னிரெண்டாம் இடத்திலேயே இருக்கிறார். இதனால், பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும், குரு பகவான் இந்த 2019ம் வருடம் அக்டோபர் மாதம் குரு பகவான் பெயர்ச்சி அடைந்து சனி, மற்றும் கேது பகவானுடன் இணைகின்றார்.

rahuketu

இதன் காரணமாக, ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுவீர்கள். புனித ஸ்தலங்கள், தீர்த்தங்களில் நீராடும் வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கறிஞர் தொழில்களில் உள்ளவர்களுக்கு இது ஒரு பொன்னான காலம் என்றுக் கூட கூறலாம். வாதங்களில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். இருப்பினும், அவைகளை நீங்கள், தான தர்மங்கள், மற்றும் ஆன்மீகப் பணிகளுக்காக செலவு செய்வீர்கள்.

கேதுவின் பார்வையால், உங்கள் குழந்தைகள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவர். அவர்கள் ஈடுபடும் போட்டிகளிலும், தேர்வுகளிலும் நல்லதொரு வெற்றியைப் பெறுவர். உங்கள் கால்களில் மற்றும் பாதங்களில் வலி ஏற்படும். மறைமுக வருமானம் அதிகரிக்கும். இருப்பினும், அவைகளில் சற்றுக் கவனமாக இருக்கவும். ராகு மற்றும் கேது இருவருமே உங்களுக்கு சாதகமாக உள்ளனர். இதனால், உங்களுக்கு இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது.

மேலும், மற்றக் கிரகங்களான, சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் ஆகியோரின் பார்வையால் உங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் வராமல், பல நன்மைகள் நடக்கும்.

இந்த ராகு கேதுப் பெயர்ச்சியில் உங்கள் மகர ராசிக்கு நூற்றுக்கு 79% நன்மைகளே நடக்கும்.

நன்மைகள் நடக்க ஸ்ரீ விநாயகப் பெருமானை வணங்கி வரவும்.

சதுர்த்தி தினங்களில், விநாயகப் பெருமானுக்கு அருகம் புல் மாலை அணிவித்து வணங்கி வர நன்மைகள் தொடரும்.