சனீஸ்வரனை அதிபதியாகக் கொண்ட ராசி அன்பர்களே! இந்த ராகு-கேது பெயர்ச்சியின் காரணமாக, உங்கள் ராசிக்கு பல மாற்றங்கள் நடக்க உள்ளன.
இந்த ராகு கேது பெயர்ச்சியின் பொழுது, உங்கள் ராசியிலேயே சூரியன் மற்றும் புத பகவான் இருக்கின்றனர். ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த சமயம் குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு வரும் 2020 வரைக் காத்திருக்கவும். எனில், தற்காலத்தில் புத்திரப் பாக்கியம் ஏற்படுவதை ராகு பகவான் தடுப்பார்.
கேட்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும் இது உண்மை. கட்டாயம் குழந்தைப் பிறந்தே ஆக வேண்டும் என நினைப்பவர்கள் உங்களுடைய சுய ஜாதகத்தை ஆராயவும். ஐந்தில் இருக்கும் ராகு பகவானால் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் மற்றும் பொருள் வரவு இருக்கும். உங்கள் குழந்தையின் உடல்நிலைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், அவர்கள் சற்று மந்தமாக காணப்படுவர். அவர்கள், போதைப் பொருட்கள் பயன்படுத்துகின்றனரா என கவனமுடன் கவனிக்கவும்.
குழந்தைகள் தவறான வழிகளில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
ராகுவின் பார்வையால் பல தான தர்மங்கள் மற்றும் புண்ணியக் காரியங்களை செய்ய ஆரம்பிப்பீர்கள். ராகுவின் பார்வையால் அரசாங்க விஷயங்களில் சற்றுக் கவனமுடன் இருக்கவும். ஏனெனில், மறைமுக வருமானம் சற்று அதிகரிக்கும். லஞ்சம், வட்டிக்கு விடுதல், தவணை மூலம் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்தத் தடைகள் அனைத்தும் நீங்கும்.
வரும் அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் குருவின் பார்வையால், தடைபட்ட குழந்தைப் பாக்கியம் பெண் தெய்வங்களின் அருளால் உண்டாகும். எனவே, பெண் தெய்வங்களை வணங்கி வரவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக, வருமானம் தாருமாறாக அதிகரிக்க ஆரம்பிக்கும். இந்த ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பின் வசதியான வாழ்க்கைக்குக் குறையிருக்காது. பெயரும் புகழும் உண்டாகும்.இருப்பினும், உங்கள் மூத்த சகோதர, சகோதரிகளிடம் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
சனி பகவானுடன் சேர உள்ளதால், நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் நேர்மையும், நியாயமும் தெரியும். நேர்மையாகவே சம்பாதிப்பீர்கள். ராகுவின் பார்வையால் தவறான வழிகளில் சென்றுவிட வேண்டாம். அது உங்களுக்குக் கஷ்டத்தையே தரும். மேலும், பண வரவு வர ஆரம்பிக்கச் சற்றுத் தாமதமும் ஆகும்.
மேலும், குரு பகவான் வரும் அக்டோபர் மாதம் நடக்கும் குருப்பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், அக்டோபருக்கு பின் வருமானம் தாறுமாறாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். நண்பர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உதவியும், ஒத்துழைப்பும் உங்களுக்கு நிறையவே கிடைக்கும்.
திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரும் குருப் பெயர்ச்சிக்குப் பின் அழகிய வரன்கள் அமையும். அதுவரை சற்றுக் காத்து இருக்கவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு தடை இருக்காது. மனதில் குழந்தைப் பாக்கியம் பற்றியக் கவலையைத் தவிர்த்து மற்ற எந்தக் கவலையும் இருக்காது. மேலும், அந்தப் பிரச்சனையும், வரும் அக்டோபருக்குப் பின் நடக்கும் குருப் பெயர்ச்சியில், குருவின் பார்வையால் நிவர்த்தி அடையும்.
ஆக மொத்தம் இந்த ராகு கேது பெயர்ச்சியில் இந்த இரண்டு கிரகங்களுமே நன்மை அளிக்கும் வகையிலேயே இருக்கின்றன. அது மட்டுமின்றி, சனி, குரு, சூரியன், புதன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகியோரும் நன்றாகவே இருக்கின்றனர்.
உங்கள் கும்ப ராசிக்கு நூற்றுக்கு 91% நன்மைகளே நடக்கும்.
மேலும், பல நன்மைகள் நடக்க, ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.