கன்னி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
kanni.jpg

புத பகவானை அதிபதியாகக் கொண்ட, கன்னி ராசி அன்பர்களே! இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியின் காரணமாக உங்கள் ராசிக்குப் பலவித மாற்றங்கள் நடைபெற உள்ளன.

இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து வந்த ராகு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

ராகு பதினொன்றில் பத்தாம் இடத்திற்குச் செல்வதும் நல்லப் பலன்களையேத் தரும். பத்தில் ஒரு பாம்பாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. அவ்வாறு இருக்கும் பாம்பு கிரகத்தால் பல நன்மைகள் ஏற்படும். முதலில் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். விரும்பிய இடத்தில் பணியிட மாற்றம் கிடைக்கும். விரும்பிய தொழில் அமைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் விருத்தி அடையும். வியாபாரம் பல மடங்கு பெருகும்.

முதலில் உங்கள் தொழில் நன்றாக இருக்கும்.

தொழில் காரணமாக வெளியூர், வெளிமாநிலம் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களுடன் பணிபுரிபவர்கள் உதவியாக இருப்பர். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். இருப்பினும், சனியின் பார்வை பலனால், அனைத்தும் சற்றுத் தாமதமாகவே கிடைக்கும். அதே சமயம், கடுமையாக உழைக்க வேண்டி வரும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி வரலாம். தொழிலில் சிறு சிறு இடைஞ்சல்கள் தோன்றி மறையும். கலைத்துறையில் சாதிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும்.

இதுவரை இருந்து வந்தப் பணப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உங்கள் தொழிலை நினைத்து திருப்தி அடைவீர்கள். உத்யோக உயர்வு, அரசாங்க உத்யோகம் போன்றவை நன்றாகவே நடக்கும். இதுவரை, வேலை இல்லாமல், திரிந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக, கோவில்கள், புனித ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு மன அமைதியும், நிம்மதியும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

தேவையற்றக் கவலைத் தரும் விஷயங்களில் ஈடுபட வேண்டாம். புதிதாக பழகும் மனிதர்கள் மூலம் பல நன்மைகள் நடக்க உள்ளன. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ள மனிதர்களின் ஆதரவும், உதவியும் உங்களுக்குக் கிடைக்கும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு ஏற்கனவே சனி பகவான் இருக்கிறார். இதனால், உங்கள் தாயாருடன் இருந்த வந்த மனக்கசப்பு அதிக்கரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களை உங்கள் குடும்பத்தில் நீங்கள் குறைக்கவும். தாய் வழி உறவினர்கள் மூலமும் ஒரு சிலப் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன.

rahuketu

கேதுவுடன் சனியும் இருப்பதால், வாகனங்களில் செல்லும் பொழுது, மிகக் கவனமாக இருக்கவும். இந்த கேது, சனி அமைப்பால், புதிய வாகனங்கள் வாங்குவதற்கு தடைகள் வந்து கொண்டே இருக்கும். கவலைப்பட வேண்ட. 2ண்ட் ஹேண்ட் வாகனங்களை வாங்குங்கள். அது நன்மையளிக்கும். புதிய வாகனங்களை வாங்கினால், பழுது பார்த்தல், விபத்துக்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குருவின் பார்வைக் காரணமாக, இந்தப் பிரச்சனைகள் 2019ம் ஆண்டு அக்டோபர் வரை அவ்வளவுப் பெரியதாக இருக்காது. ஆனால், அக்டோபரில் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பின் சற்றுக் கடினமாகவே இருக்கும்.

உங்களுடையப் பொருட்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். சனி நான்கில் கேதுவுடன் இருப்பதால், உங்களுடையப் பொருட்கள் காணாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்கவும். யாருடைய வாழ்க்கையிலும் நீங்கள் தலையிட வேண்டாம்.

கேதுவின் பார்வையால், உங்கள் எதிரிகளை எளிதாக வென்று விடுவீர்கள். அவர்கள் உங்கள் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கமாட்டார். வருமானத்திற்குக் எவ்விதக் குறையையும், கேது பகவான் தர மாட்டார். இருப்பினும், வயிற்றில் பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, சரியாக நேரத்திற்கு உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

உங்கள் கன்னி ராசிக்கு இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் கேது பகவான் மட்டுமே பிரச்சனைகளைத் தருகிறார்.

உங்கள் ராசிக்கு நூற்றுக்கு 76% நன்மைகளே நடக்க உள்ளன.

கேதுவினால், எவ்விதத் தடங்கல்களும் ஏற்படாமல் இருக்க விநாயகரை வணங்கி வரவும்.

கஷ்டங்கள் நீங்கி இன்பம் பிறக்கும்.