கடகம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

24 October 2019 ராசிபலன்
kadagam.jpg

சந்திர பகவானை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே! இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியின் காரணமாகப் பல மாற்றங்களைக் காண உள்ளீர்கள். இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியினால், ராகு பகவான் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் ஆறாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார். இதனால், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில் வெளிநாடு செல்ல விரும்பினால் தாராளமாகச் செல்லலாம். எவ்விதத் தடையும் இருக்காது. வெளிநாட்டில் குடிபெயர நினைப்பவர்கள் தாராளமாக குடியெரலாம். எவ்விதப் பிரச்சனையும் இல்லை. மேலும், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்புபவர்கள் எவ்விதத் தடையும் இன்றி செல்லலாம்.

இந்த ராகு பெயர்ச்சியின் காரணமாக, வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில்கள் நன்றாக இருக்கும்.

நீங்கள் வெளி ஆட்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்புகள் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டி வரும். நீங்கள் கடக ராசியினர் என்பதால் மது பானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்தக் காலக்கட்டத்தில் மது குடிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும், எவ்வித போதைப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். சீட்டாடுதல், பெட்டிங் போன்றவைகளில் ஈடுபட்டால் மிகுந்த நஷ்டத்தை அடைய வேண்டி இருக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஆனால், அதற்கேற்ற வருமானம் இருக்காது. மேலும், பணியில் சிறு பிரச்சனைகள் வேலையில் தொய்வு போன்றவை ஏற்படலாம். மனதினை அமைதியுடனும், சாந்தமாகவும் வைத்துக் கொள்ளவும். கடன் வாங்கி செலவு செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே ஏற்படும். இருப்பினும், அவைகளை உங்களால் குறைக்க முடியும்.

அக்டோபருக்குப் பின், இத்தகையப் பாதிப்புகள் படிப்படியாக குறையும். இருப்பினும், முழுமையாக மாறாது. இந்தக் காலக்கட்டங்களில், குழந்தைப் பிறப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு வருகின்ற அக்டோபர் மாதத்திற்குப் பின் அழகியக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ராகுவின் பார்வையால், வருமானம் 2019 முடிவில் அதிகரிக்க ஆரம்பிக்கும். தொழிலில் ஒருவித ஸ்திரமற்றத் தன்மை காணப்படும்.

rahuketu

கேது பகவான் உங்கள் ராசிக்கு, ஆறாம் இடத்தில் இருக்கிறார். இதனால், உங்கள் எதிரிகளை வெல்லும் வல்லமையை கேது பகவான் வழங்குவார். ராகுவால் தொழிலில் தடைகள் ஏற்பட்டாலும், கேதுவின் ஆதிக்கத்தால் தொழிலில் வெற்றிகள் கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் நீரினால் கண்டம் உண்டாகலாம். எனவே, தண்ணீரில் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். சுகபோகமான வாழ்க்கைக்கு குறையிருக்காது.

உறவினர்கள் உங்களுக்கு நல்ல மரியாதைத் தரும். இக்காலக்கட்டத்தில், கடக ராசி இளைஞர்களுக்கு பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்தக்காலக்கட்டங்களில், கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் பிரச்சனைகளை மட்டுமே பெற வேண்டி இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

சனிபகவானுடன் இணைந்து இருப்பதால், கேதுவால் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களும், சற்று மெதுவாகவே நடக்கும். அக்டோபருக்குப் பின் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக, ராகுவால் ஏற்பட்டத் தொல்லைகள் நீங்கும்.

ஆக மொத்தம் கடக ராசி அன்பர்களுக்கு, நூற்றுக்கு 82% நன்மைகளே நடக்கும்.

ராகுவால் ஏற்படும் தோஷம் நீங்க திருநாகேஸ்வரம் சென்று வரவும்.

2019ம் ஆண்டு ஒருமுறையாவது, காளஹஸ்தீ சென்று பின் திருப்பதிக்கு சென்று வர தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.