பர்வத யோகம் என்றால் என்ன?

10 February 2020 ஜோதிடம்
rahudhisai1.jpg

யோகங்கள் பல இருந்தாலும், ஒரு சில யோகங்கள் பெரிய அளவில் பலன் அளிப்பவை. அவைகளில் ஒன்று தான் இந்த பர்வத யோகம். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும். பிச்சைக்காரனாகப் பிறந்த போதிலும், இந்த யோகத்தின் பலனாக குபேரனாக வாழும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில், ராகு இருக்கும் இடத்தில் இருந்து, நான்கு, ஏழு மற்றும் பத்தாம் இடங்களில், ஏதாவது கிரகங்கள் தனித்து இருந்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, இந்த பர்வத யோகம் உண்டாகும்.

இந்த யோகத்தின் பலனால், நல்ல செல்வ செழிப்பு உண்டாகும். அதிர்ஷ்டமும், ஆதரவும் தேடி வரும். மிகவும், அன்பானராகவும், பாசம் மிகுந்தவராகவும் இருப்பர். திருமண வாழ்க்கை, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பேச்சுத் திறமை நன்றாகவே இருக்கும். மன தைரியம் உடையவராகவும், கற்பனை வளம் மிகுந்தவராகவும் இருப்பர்.

ஜாதகத்தில் உள்ள அரிஷ்ட தோஷமும் நீங்கும். பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கும் பாக்கியம் உண்டாகும். ஆனால், இந்த யோகத்தினைப் பெற, லக்கினாதிபதி ஆட்சி, உச்சம் அல்லது மூலத் திரிகோணம் போன்ற இடங்களில், வலிமையுடன் இருக்க வேண்டும்.