பல்லி விழும் பலன்கள்! உடலில் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன்?

24 October 2019 ஜோதிடம்
palli.jpg

முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகத்தையும், ஜோதிடத்தையும் கவனித்துள்ளனர். மிருகங்கள் முதல் பறவைகள் வரை, அனைத்திலும் பலன்கள் வழங்கியுள்ளனர். அதில் பல்லி மிக முக்கியமானது. பல்லியை கேதுவின் அம்சமாக கருதுகின்றனர். நாம் முக்கியமான விஷயங்களைப் பேசும் பொழுது, பல்லியின் சப்தம் ஏற்பட்டால், அதனை நல்ல சகுணம் என்கின்றனர். அதே போல், பல்லி நம் உடலில் எந்தப் பகுதியில் விழுந்தால் என்ன பலன், என்பதைப் பார்ப்போம்.

பல்லித் தலையில் விழுவதை, கெட்ட சகுணம் எனக் கணித்து உள்ளனர். பள்ளி தலையில் விழுந்தால், கெட்ட நேரம் வரப் போவதாக கருதுகின்றனர். மேலும், மரணம், கடும் எதிர்ப்பு, மன நிம்மதியின்மை ஆகியவற்றை குறிக்கும்.

நெற்றியில் பல்லி விழுவது நல்ல சகுணமாகவே அனைவராலும் கருதப்படுகிறது. நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால், கீர்த்தி என்றும், வலது பக்கம் விழுவதனை, லட்சுமி கடாட்சமாகவும் கருதுகின்றனர்.

முடியில் விழுந்தால் நன்மை உண்டாகும். முகத்தில் பல்லி விழுவதை, நல்லதாகவே சாஸ்திரங்களால் பார்க்கப்படுகின்றன. புருவம், கன்னத்தில் விழுந்தால், உறவினர்கள் உங்களைக் காண உறவினர்கள் வரலாம். புருவத்தில் விழுந்தால், அமைச்சர்களின் ஆதரவு கிடைக்கும்.

உடலின் இடது கை, இடது காலில் பல்லி விழுந்தால் நன்மை உண்டாகும். வலது கை என்றால், உடல்நலம் பெரும்பாலும் பாதிக்கப்படும்.

பிறப்புறுப்பில் பல்லி விழுந்தால், கஷ்டம் வர உள்ளதைக் குறிக்கும். கால் பாதங்களில் பல்லி விழுந்தால், வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள்.

தொப்புளில் பல்லி விழுவதை அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். தொப்புளில் பல்லி விழுந்தால், நகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

தொடையில் பல்லி விழுந்தால், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஆகாது.

மார்பில் பல்லி விழுவது நல்லது. மார்பின் இடது பக்கத்தில் விழுந்தால் சுகம் கிடைக்கும், வலது பக்கத்தில் விழுந்தால் லாபம் கிடைக்கும்.

கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால், வெற்றி உண்டாகும். வலது பக்கத்தில் விழுந்தால் பகை உண்டாகும்.

இவ்வாறு பல்லியினால் ஏற்படும் விஷயங்களை, ஒரு சிலர் தோஷங்களாகக் கருதுகின்றனர். அவ்வாறு ஏற்படும் தோஷங்களை நீக்க, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாளை வணங்கவும். பின்னர், அங்கு சூரியனும், சந்திரனும் தங்கம் மற்றும் வெள்ளியால், ஆன பல்லியாக உள்ளனர்.