பழநி முருகனுக்குச் செய்யப்படும் விஷேச அபிஷேகங்கள்

24 October 2019 கோவில்கள்
palani.jpg

பழநி முருகனுக்கு பழங்காலம் தொட்டே சில முக்கிய வழிபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றை பற்றிய சில தொகுப்புகளை இங்கு காணலாம்.

பழநி மலையில் இருக்கும் முருகன் சிலையானது, நவபாசனத்தினால் செய்யப்பட்டது. இதனை போகர் முதல் 81 சித்தர்கள், 9 வருடங்களில் முடித்து பிரதிஷ்டை செய்தனர்.பழநி ஆண்டவர் சிலைக்கு முழு அபிஷேகமூம் நான்கு முக்கிய பொருட்களால் செய்யப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், விபூதீ, பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் ஆகும். மார்கழி மாதங்களில் நீரினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் மற்றும் பால் அபிஷேகங்களும் நடைபெறும்.

ஒரு நாளுக்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. ஒரு அபிஷேகத்திற்கு 6 முதல் 8 நிமிடம் ஆகிறது. முருகனுக்கு இரவு நேரத்தில் சந்தன காப்பு மார்பினில் வைக்கப்படும். ஆதே போல இரண்டு புருவங்களுக்கு இடையிலும் சந்தனம் வைப்பர். முருகனின் சிலையானது அதிக உஷ்ணத்தால் வியர்வையை வெளிப்படும். இது காலை அபிஷேக நீரோடு சேர்த்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அந்த அபிஷேக நீரானது, பல முக்கிய வியாதிகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. அபிஷேகத்திற்க்குப் பின்பு, மாலை மற்றும் மலர்களை முருகனுக்கு அணிவிப்பதில்லை.

அறிந்திறாத சில முக்கிய தகவல்கள்

முருகனின் இடதுபுறத்தில் ஒரு மரகத லிங்கம் உள்ளது. அது சிறியதாக இருப்பதால் யாராலும் எளிதில் பார்க்க முடியாது, வலது புறத்தில் தீப ஆராதனை காட்டும் போது மட்டுமே தென்படும். போகர் 2 மரகத லிங்கங்களை வடித்தார். அதில் ஒன்று முருகப்பெருன் கருவரையிலும் மற்றொன்று போகர் கருவறையிலும் அமையப் பெற்றுள்ளது. முருகனின் சிலையின் நெற்றியில் உள்ள ருத்ராட்சம், கைவிரல், கால்கள் மற்றும் பல பகுதிகள் ஒரு அரிய வகை உளியால் சுத்தமாக செதுக்கப்பட்டுள்ளது. முருகனின் சிலை பொதுநலனுக்காக செய்யப்பட்டதாகும். போகன் தன் மனைவிக்கு செய்த வாக்கின் படி மேற்கு திசை நோக்கி சிலையை நிறுவினார். ஏனவே மேற்கு மக்கள் முருகனை தெய்வமாக வணங்குகின்றனர்.

போகர் இரண்டு நவபாசன சிலை வடித்ததாகவும் அதில் ஒன்று பழநியிலும், மற்றொன்று குறிஞ்சி ஆண்டவர் கோவிலும் இருக்கலாம், என்ற கருத்து நிலவி வருகிறது.