சித்திரை திருவிழா இல்லை! மதுரை மக்கள் வேதனை!

07 May 2020 கோயில்கள்
alagar-chithirai-festival.jpg

மதுரையில் இந்தாண்டு நடைபெற வேண்டிய சித்திரைத் திருவிழா நடைபெறாத காரணத்தினால், பொதுமக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இன்று காலையில் (07-05-2020) மதுரையைக் காக்கும் தெய்வமான, கள்ளழகர், வைகை ஆற்றில் எழுந்தருள வேண்டியதாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டுது. இதனை முன்னிட்டு, அழகர் மதுரைக்குள் வரவில்லை.

தன்னுடைய அழகர் மலையில் அமைந்துள்ள, திருக்கள்ளழகர் கோயிலிலேயே, நாளை எழுந்தருள உள்ளார். வைகை நதியில் இருந்து, நீர் எடுத்துச் செல்லப்பட்டு, அழகர் கோயிலிலேயே அவர் எழுந்தருளவும், மண்டூக மகரிசிக்கு சாப விமோட்சனம் வழங்கும் வைபவமும் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து, பத்து நாட்களுக்கு, அழகர் கோயில் திருவிழாவானது கொண்டாப்படும். ஆனால், இந்த ஆண்டு அது கிடையாது என, கோயில் நிர்வாகம் அறிவித்து விட்டது.

இதனால், அழகரின் பக்தர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர் ஒவ்வொரு வருடமும், மதுரைக்குள் வந்து மதுரை மக்களுக்கு அருளாசி வழங்குவார். அந்த ஆண்டு, நன்றாக இருக்கும் என்பது மதுரை மக்களின் நம்பிக்கை. தற்பொழுது அழகர் வராத காரணத்தினால், அவர் சோகத்தில் உள்ளனர்.