புத்தாண்டு ராசி பலன்கள் 2020! விருச்சிகம்

24 October 2020 ராசிபலன்
viruchagam.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட, விருச்சிக ராசி அன்பர்களே! இந்த 2020ம் ஆண்டு உங்களுக்குப் பலவித நன்மைகளை வழங்க உள்ளது. குரு பகவான் உங்கள் ராசிக்கு, இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருக்கின்றார். சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் ஆட்சியில் இருக்கின்றார். கேது பகவான் குரு பகவானுடன் இணைந்து, இரண்டாம் இடத்தில் இருக்க உள்ளார்.

இது உங்களுக்கு நல்லதொரு வருடமாக அமைய உள்ளது. குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து, படாத பாடு படுத்தி எடுத்து வந்த நிலையில், நடந்து முடிந்த குருப் பெயர்ச்சியில் இருந்து, நல்லதொரு மாற்றத்தினை நீங்கள் உணர ஆரம்பித்துவிட்டீர்கள். குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடத்தில், குரு பகவான் ஆட்சியில் சர்வ பலத்துடன் இருக்கின்றார். இது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். உங்கள் பேச்சில் மகிழ்ச்சி தெரியும். முகம் பொலிவு பெறும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவ ஆரம்பிக்கும். வருமானம் அதிகரிக்கும்.

குருவின் பார்வையால், வாங்கியக் கடன்களை அடைக்க ஆரம்பிப்பீர்கள். உடல்நலம் சீராகும். ஒரு சிலரின் உடல் எடைக் கூட வாய்ப்புகள் உள்ளன. எதிரிகளின் தொல்லையை சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கைத் தேவை. வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு அழகிய வேலைக் கிடைக்கும்.

செய்யும் தொழிலில் நல்லதொரு வளர்ச்சி உண்டாகும். வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சி பிறக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில், யோக நிலையில் இருக்கின்றார். குருவின் பார்வையில் இருப்பதனால், இதுவரை கஷ்டங்களை வழங்கி வந்த அவர், தற்பொழுது நன்மைகளை வழங்க ஆரம்பிக்க உள்ளார். ஜனவரி 24 முதல், ராகு யோகத்தினை வழங்குவார். எட்டில் உள்ள ராகுவால் பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அடிவயிற்றில் வலி ஏற்படலாம். எனவே, கவனமுடன் இருக்கவும். முடிந்த வரை, வெளி இடங்களில் உணவு உட்கொள்ள வேண்டாம்.

கேட்ட இடத்தில், கடன்கள் கிடைக்கும். தொழிலினை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவை உண்டாகும். சனி பகவான், உங்கள் ராசிக்கு மூன்றுக்கும், நான்காம் இடத்திற்கும் அதிபதி ஆவார். அவர், மூன்றாம் இடத்திற்கு, ஜனவரி 24ம் தேதி பெயர்ச்சி அடைந்து, ஆட்சி அமைக்க உள்ளார்.

இதனால், உங்கள் முயற்சியில் சிறுசிறுத் தடைகள் ஏற்பட்டாலும், அந்த முயற்சியானது வெற்றியிலேயே முடியும். இளைய சகோதரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படலாம். மனதில் சிலக் கஷ்டங்கள் உண்டாகலாம். மனக் குழப்பம் அதிகரிக்கலாம். குழந்தைப் பிறப்புத் தாமதம் ஆனாலும், நல்ல வலிமையான குழந்தைகள் பிறக்கும், தந்தை மூலம் நன்மைகள் நடைபெறும். வெளிநாடு செல்ல விரும்பியவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வரும்.

குரு பகவான், அதிசாரமாக மகரத்திற்குப் பெயர்ச்சி அடைந்து, பின் மீண்டும் தனுசிற்கு வருகின்றார். இதன் காரணமாக, திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அழகிய வரன்கள் அமையும். ஒப்பந்ததாரர்களுடனும், சக ஊழியர்களுடனும் நல்ல உறவு நிலை நீடிக்கும். தொழில் மூலம் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும்.

தொடர்ந்து குடும்பத்துடன், ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். மலைகளில் உள்ள கோவிலுக்குச் சென்று வணங்கி மகிழ்வீர்கள். சென்ற ஆண்டினைக் காட்டிலும், இந்த ஆண்டு உண்மையிலேயே எவ்வளவோ மேல், என்று நீங்களே கூறும் அளவிற்கு இந்த ஆண்டு இருக்க உள்ளது.

மொத்தத்தில் 2020ம் ஆண்டு உங்கள் விருச்சிக ராசிக்கு நூற்றுக்கு, 85% நன்மைகளே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க பழனி முருகனை ஒரு முறை சென்று வணங்கி வரவும். குல தெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யவும்.