அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.
சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! இந்த 2020ம் ஆண்டு உங்கள் ராசிக்குப் பலவித நன்மைகள் நடக்க உள்ளன. உங்கள் ராசியினை குரு பகவான் பார்ப்பது மிகவும் விஷேஷமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில், குரு பகவான் ஆட்சியுடன் கேள யோகத்தினை அடுத்த ஆண்டு முழுக்க உருவாக்க உள்ளார்.
உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில், குரு பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக இணைந்து இருக்கின்றார். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தினை அளிக்கக் கூடிய விஷயமாகும். இதுவரை, மிக சோம்பலாக இருந்து வந்த உங்கள் குழந்தைகள், வருகின்ற ஜனவரி 24க்குப் பிறகு, சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விடுவர். அவர்கள் வாழ்க்கையில் இருந்து வந்த தேக்கங்கள் நீங்கும். தேர்வுக்குப் பயிலும் உங்கள் குழந்தைகள் சிறப்பான வெற்றியினைப் பெறுவர். குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய குழந்தைகள் பிறக்கும்.
குல தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தினைப் பார்க்கின்றார். இதனால், உங்கள் தந்தையின் மூலம் ஆதாயம் உண்டாகும். அவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் மற்றும் மோதல்கள் மறையும். அவருடைய சொத்துக்கள், பொருட்கள் முதலானவை உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் மூலம் இருந்து வரும் வருமானம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவும், அவர்களின் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் ராசியினை குரு பகவான் பார்ப்பது மிகப் பெரிய வெற்றிகளை உங்களுக்குத் தேடி தரும்.
உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்தப் பிரச்சனைகள், சங்கடங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்கும். நீங்கள் தீட்டும் திட்டங்கள் அனைத்துமே வெற்றிப் பெறும். குரு பகவான், அதிசாரமாக மகரத்திற்கு சென்று, அங்கு சனி பகவானுடன் இணைவார். இதனால், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். தொழிலில் மாபெரும் வளர்ச்சி உண்டாகும்.
சனி பகவான், ஜனவரி 24ம் தேதி அன்று, தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இது ஒரு சிறப்பான அமைப்பாகும். இதன் காரணமாக, உங்கள் எதிரிகளை உண்டு இல்லை என, ஒரு வழிப் பார்த்துவிடுவீர்கள். உடல்நலம் சீராகும். கடன் தொல்லை தீரும். நீண்ட நாட்களாக அடைக்க முடியாமல் இருந்து வந்த கடன் தொல்லைகள் தீரும். பணப் பிரச்சனைகள் நீங்கும். உடலில் இருந்து வந்த மறைமுகப் பாதிப்புகள் நீங்கும்.
தூங்கும் பொழுது, பயமுறுத்தும் கனவுகள் வரலாம். தூக்கமில்லாமல் தவிக்கும் நிலையும் ஒரு சிலருக்கு உண்டாகலாம். இளைய சகோதரர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில், சிறு சிறுத் தடங்கல்களுக்குப் பிறகு வெற்றிக் கிடைக்கும். ராகு பகவான், உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில், குருவின் பார்வையில், சுப பலத்துடன் இருக்கின்றார். இதனால், இதுவரை வருமானத்தில் இருந்து வந்தத் தடை நீங்கும். ஒரு ரூபாய் வந்த இடத்தில், 10 ரூபாய் வருமானம் வரும் வாய்ப்புகளும் உள்ளன. ராகுவின் பார்வையின் காரணமாக, திடீர் அதிர்ஷ்டங்களாலும், பொருள் வரவாலும் திக்குமுக்காடிப் போவீர்கள். தந்தையின் மரியாதையை மட்டும் நீங்கள் பெற்று விட்டீர்கள் என்றாலே, இந்த ஆண்டு ஒளிமயமான ஆண்டாக இருக்கும்.
ஆக மொத்தம், இந்த 2020ம் ஆண்டு உங்கள் சிம்ம ராசிக்கு நூற்றுக்கு 95% நன்மைகளே நடக்கும். மேலும் பல நன்மைகள் நடக்க, துர்க்கை வழிபாடு, முருகன் வழிபாடு செய்யவும். மலையில், உள்ள பெருமாளை வணங்கி வர, சனியின் கெடுதல்கள் மறையும். குல தெய்வத்தினை மறக்காமல் தொடர்ந்து வணங்கி வரவும்.