புத்தாண்டு ராசி பலன்கள் 2020! ரிஷபம்

24 October 2020 ராசிபலன்
rishabam.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த ஆண்டு நீங்கள் அனைத்து வளங்களையும், நலங்களையும் பெற தமிழன்நியூஸ் வாழ்த்துக்கின்றது. சரி, இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இந்த வருடம் முழுக்க ராகு பகவான் இருக்க உள்ளார். அவர் மீது குருவின் பார்வையும், கேதுவின் பார்வையும் விழுகின்றது. இதன் காரணமாக, தொடர்ந்து, பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிக்கவும். முகத்தில் மலர்ச்சி உண்டாகும். இவ்வளவு நாட்களாக இருந்து வந்த தடைகள் நீங்கும். குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, சிறியத் தடைகளுக்குப் பின், மார்ச் மாதத்திற்கு மேல் அழகியக் குழந்தைகள் பிறக்கும். பண வரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். நிம்மதியான உறக்கம் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நன்மை அளிக்கும்.

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் கேது பகவான் இருக்கின்றார். இதனால், இல்லறத்தில் நாட்டம் குறைந்திருக்கும். கவலை வேண்டாம். இது வெறும் தற்காலிகமானதே. தொடர்ந்து, குரு பகவானுடன் கேது பகவான் எட்டாம் இடத்தில் இணைந்து இருக்கின்றார். இதன் காரணமாக, உடல் சார்ந்த ஆசைகள் குறைவாக இருக்கும். மறைமுக வருமானத்தின் மீது நம்பிக்கை இருக்காது. திருடி சம்பாதிக்க மனம் இடம் கொடுக்காது. கணவன் மற்றும் மனைவி இருவருமாகச் சேர்ந்து, கோவிலுக்குச் செல்வது, புனித தீர்த்தங்களில் நீராடுவது என இந்த ஆண்டு நிம்மதியாக செல்லும். பெரிய அளவில் வாங்கியக் கடன்களை, இந்த ஆண்டு அடைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனை நீங்கள் செய்வீர்கள். கடன்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். தொழிலில் இருந்து வரும் வருமானம், குறைவாக இருந்தாலும், குடும்பத்திற்குத் தேவையான வருமானத்திற்கு குறைவிருக்காது. எதிரிகளை எளிதாக வென்றுவிடுவீர்கள். தொழிலிலும், வாழ்விலும் இருந்து வந்தத் தடைகள் நீங்கும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கின்றார். இதனால், மறைமுக அவமானங்கள் ஏற்படலாம். அவர் உங்கள் ராசிக்கு நன்மைகளை வழங்குபவர் அல்ல. இருப்பினும், அவர் பார்க்கும் பார்வையின் காரணமாக, பல நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். நீண்ட நாட்களாக கட்ட முடியாமல் இருந்து வந்த கடன்களை அடைக்கும் வழிகளை அவர் உங்களுக்குக் காட்டுவார். உடலின் அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புக் கூடலாம்.

அவர் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தினையும் பார்க்கின்றார். இதனால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். இதுவரை வருமானத்திற்கு வழியில்லாமல் இருந்து வந்த நீங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பீர்கள். பேச்சில் இனிமை தெரியும். முகத்தில் வசீகரம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தினையும் குரு பகவான் பார்க்கின்றார். இதனால், தாயின் உடல்நிலை சீராகும். அவருடன் இருந்து வந்தப் பிரச்சனைகள் தீரும். நிலம், வீடு, வாகனம், புதிய பொருட்கள், தோட்டங்கள், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவீர்கள். கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உயர்கல்விக்கு முயற்சிப்பவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். தாயின் சொத்துக்கள் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த காலக் கட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளவும். தாயின் நகைகள் அல்லது அவருடையப் பொருட்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 12ம் இடத்தினையும் அவர் பார்க்கின்றார். இதனால், சுப விரயங்கள் ஏற்படலாம். புனித காரியங்களுக்காக செலவுகள் ஏற்படலாம். எனவே, புதியப் பொருட்களை வாங்குதல், இரு சக்கர வாகனம் வாங்குதல், நிலம் வாங்குதல் போன்றவைகள் மூலம் செலவு அதிகரிக்கலாம். வெளிநாடு செல்ல காத்திருந்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் அமையும்.

சனி பகவான் ஜனவரி மாதத்தில் நடைபெறும் சனிப் பெயர்ச்சிக்குப் பின், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். அவர் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கும், பத்தாம் இடத்திற்கும் அதிபதி ஆவார். அவர் உங்களுக்கு யோகாதிபதியும் ஆவார். இவ்வளவு சிறப்புகளை உடையவர், ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைவது மாபெரும் விஷேசம் என்றேக் கூற வேண்டும்.

அவர் ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைவதன் காரணமாக, உங்கள் தந்தை மூலம் பல நன்மைகளை நீங்கள் அடையலாம். அவருடையப் பொருட்கள் உங்களை வந்து சேரும். இது நாள் வரை, கஷ்டங்களையும், சங்கடங்களையும் தந்து வந்த சனி பகவான் இனி, நன்மைகளை அள்ளித் தர உள்ளார். ஒரு விஷயத்தினை நீங்கள் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சனி பகவான், மெதுவாகவே பலன்களை வழங்குவார்.

கடினமாக உழைக்க வேண்டி வரலாம். தொழிலில் இருந்து வரும் வருமானம், உழைப்பிற்கு ஏற்றபடியே வரும். மூத்த சகோதரர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். இளைய மனைவியுடன் சச்சரவுகளைத் தவிர்க்கவும். உங்களுடையத் தைரியம் குறைய ஆரம்பிக்கும். உடலில் புதிய தெம்பு பிறக்கும். உங்கள் எதிரிகளை எளிதாக வெல்லும் வாய்ப்பினை சனீஸ்வரன் வழங்குவார். சிறியக் கடன்களை எளிதாக அடைத்து முடிப்பீர்கள். உடலில் இருந்து வந்த நோய்கள் தீரும். உங்களுடையத் தொழிலில் சிறுத் தடைகள் வந்து மறையும்.

ஆக மொத்தம் உங்கள் ரிஷப ராசிக்கு, இந்த ஆண்டு நூற்றுக்கு 84% நன்மைகளே நடக்கும். மேலும் பல நன்மைகள் நடக்க சிவபெருமானையும், குல தெய்வத்தையும் வணங்கி வரவும்.